வியாழன், 30 ஆகஸ்ட், 2018

இட ஒதுக்கீட்டால் ஆதிக்க ஜாதியினரின் வாய்ப்புக்கள் பறிபோகிறதா ? உண்மை என்ன?

பெரிதாக பார்க்க கிளிக் செய்யவும்
Ravishankar Ayyakkannu : கேள்வி: ஆதிக்கச் சாதிகள் அட்டகாசம்
தாங்கவில்லையே? பேசாமல் மக்கள் தொகை அடிப்படையில் அவர்களுக்கு 3% இட ஒதுக்கீடு கொடுத்து 97% இடங்களை மற்ற சாதிகளுக்குத் தரலாமே?
பதில்: அதற்குத் தேவையே இல்லை.
நீட் வருவதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மருத்துவப் படிப்பு தர வரிசைப் பட்டியலைப் பாருங்கள். பிற சாதி மாணவர்கள் முதல் 25 இடங்களை அள்ளி இருக்கிறார்கள்.
இட ஒதுக்கீட்டால் தகுதி இருந்தும் தங்கள் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக ஆதிக்கச் சாதிகள் புலம்புவது எவ்வளவு பெரிய பொய் என்பதும் இதே பட்டியலைப் பார்த்தால் தெரியும்.
இப்போது இருக்கிற இட ஒதுக்கீட்டையே இரண்டு தலைமுறைகளுக்கு முறையாக நடைமுறைப்படுத்தி பெற்றோருக்கு வேலைவாய்ப்பையும் பிள்ளைகளுக்குக் கல்வி வாய்ப்பையும் கொடுத்தாலே நம் மக்கள் தங்கள் திறமைக்குரிய இடங்களைத் தாமாகப் பெறுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக