புதன், 22 ஆகஸ்ட், 2018

தயாநிதி அழகிரியின் தொலைபேசி உரையாடல்கள் உதயநிதிக்கு தெரியவருகிறதா?

மின்னம்பலம்: "திமுக சார்பில் கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சி,
மதுரையில் நடந்து முடிந்திருக்கிறது. சென்னையில் உள்ள நிர்வாகிகள் யாரும் வெளியூர் கூட்டங்களுக்கு வர வேண்டாம் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம் ஸ்டாலின். ஜெ.அன்பழகன் திருச்சிக்கும், மதுரைக்கும் போவதற்கு டிக்கெட் எல்லாம் புக் செய்துவிட்டாராம். இந்தத் தகவல் தெரிந்து அன்பழகனிடம் பேசிய ஸ்டாலின், ' நீங்க வந்தால் அங்கே இருக்கும் நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் குறையும். சென்னையில் கூட்டம் நடத்தும்போது பார்த்துக்கலாம். யாரும் எங்கேயும் வர வேண்டாம்...' எனச் சொல்லிவிட்டாராம். அதன் பிறகே அன்பழகன் டிக்கெட்களை கேன்சல் செய்திருக்கிறார்.
இதேபோல சென்னையில் இருக்கும் பல நிர்வாகிகள் வெளியூருக்கு டிக்கெட் போட்டு கேன்சல் செய்திருக்கிறார்கள். இதனால் நிர்வாகிகள் மத்தியில் சிறிய சலசலப்பு இருக்கத்தான் செய்கிறது.
எல்லாக் கூட்டங்களுக்கும் உதயநிதியும், மகேஷ் பொய்யாமொழியும் தவறாமல் ஆஜராகிவிடுகிறார்கள். அது மட்டுமல்ல; சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு கடையில்தான் வழக்கமாகக் கலைஞருக்கு பேனா வாங்குவார்களாம். அதே பிராண்ட் பேனாக்களை வாங்கி வரச் சொல்லி தாத்தா ஞாபகமாக நினைவேந்தல் கூட்டத்துக்கு வரும் விஐபிக்களுக்கு எல்லாம் பரிசளித்துவருகிறார் உதயநிதி.

இதைத் தவிர, அழகிரியின் மகன் துரை தயாநிதி திமுகவில் யாருக்கெல்லாம் போன் போட்டுப் பேசுகிறாரோ அவர்களுக்கெல்லாம் அடுத்த சில மணி நேரங்களில் உதயநிதியிடமிருந்து போன் போகிறதாம். 'அடுத்து நம்ம ஆட்சிதான். எது செய்யுறதா இருந்தாலும் யோசிச்சு செய்யுங்க... ' என்று சொல்லி அட்வைஸும் செய்திருக்கிறார். அவர் போன் செய்த விஷயம் இவருக்கு எப்படித் தெரியும் என நிர்வாகிகள் குழப்பத்தில் இருக்கிறார்களாம்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக