ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

நடிகர் விக்கிரமின் மகன் ஒட்டிய கார் விபத்து மூன்று ஆட்டோக்கள் சேதம்

நடிகர் விக்ரமின் மகன் துருவ் சென்ற கார் மோதி 3 ஆட்டோக்கள் சேதம்
தினத்தந்தி :நடிகர் விக்ரமின் மகன் துருவ் சென்ற கார் மோதியதில் 3 ஆட்டோக்கள் சேதம் அடைந்து உள்ளன. சென்னை, நடிகர் விக்ரம் மகன் துருவ் தமிழில் ‘வர்மா’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பாலா டைரக்டு செய்யும் இந்த படத்தில் நடிப்பதற்காக துருவ் நடிப்பு பயிற்சிகள் பெற்றுள்ளார்.
இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நடந்தது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை விரைவில் சென்னையில் தொடங்க உள்ளனர். இந்நிலையில் அவரது கார் மோதியதில் 3 ஆட்டோக்கள் சேதம் அடைந்து . அந்த ஆட்டோக்களில் ஒன்றில், படுத்திருந்த டிரைவர் ஒருவரும் படுகாயமடைந்தார். நடிகர் விக்ரமன் மகன் துருவ். இவர் தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். ஏற்கனவே தெலுங்கில் ஹிட்டான அர்ஜ6ன் ரெட்டி என்ற படம்தான் தற்போது தமிழில் ரீமேக்கிங் செய்யப்பட்டு வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக