வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

கேரளா ஐ ஐ டி மாணவியும் மாணவனும் ரெயிலில் பாய்ந்து தற்கொலை?

Kozhikode: Two students of Government ITI Koyilandy were found run over by a train, on the Vellarakk... Read more at: https://english.manoramaonline.com/news/kerala/2018/08/02/iti-students-run-over-train-kozhikode.html
வெப்துனியா : திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே ெகாயிலாண்டி பகுதியைச் சேர்ந்தவர் ரிஜோ ராபர்ட் (20). கோழிக்கோடு நடுவண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் பஷ்மிதா (19). இவர்கள் இருவரும் கோழிக்கோட்டில் உள்ள ஐஐடியில் படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஐஐடி சென்ற அவர்கள் வீடு திரும்பவில்லை. இருவரின் பெற்றோரும் கொயிலாண்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் வெள்ளறக்காடு ரயில் நிலையம் அருகே இருவரும் ரயில் மோதி இறந்த நிலையில் காணப்பட்டனர். போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர்களது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக