வியாழன், 2 ஆகஸ்ட், 2018

பட்ட பகலில் மதுரையில் ஒரு ஜாதிய படுகொலை .. ஊடகங்கள் மௌனம் .. தேவர் ஜாதி தலைவன் திருமாறனின் கொலவெறி ..

மணி அமுதன் மா.பா : பட்ட பகலில் சினிமாவை மிஞ்சும் அளவிற்க்கு
மதுரையில் ஒரு ஜாதிய படுகொலை நடந்துள்ளது.. தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது..
மதுரையில் இருக்கிற பெரும்பாலான முற்போக்கு அமைப்புகள் - புரட்சிகர அமைப்புகள் - ஆயுதம் தாங்கி போராடுவோம் என்றெல்லாம் பேசுகிற இயக்கங்கள் கூட இப்பிரச்சனையில் மெளம் சாதிப்பதேன்...
தென்னிந்திய பார்வர்ட் ப்ளாக் திருமாறனை கண்டு அவ்வளவு பயமா உங்களுக்கெல்லாம் அல்லது இது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தனிப்பட்ட பிரச்சனை என நினைக்குறீங்களா ??
யார் வந்தாலும் வராவிட்டாலும் ஆர்எஸ்எஸ் ன் கைக்கூலியாக செயல்படுகிற தென்னிந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியை அதன் தலைவன் ஜாதி வெறியன் திருமாறனை நான் அம்பலப்படுத்துவேன்.. எதிர்த்து நிற்பேன்..
தமிழக அரசே..
தென்னிந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியை தடை செய்..
தம்பி சபரீஷனை கொலை செய்த ஜாதி வெறி மிருகங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கு..
ஜாதி கலவரங்களை தூண்டி விடுகிற வெறியன் திருமாறனை கைது செய்..
மணி அமுதன் :தென்னிந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியினரால் நடத்தப்பட்ட ஜாதிய படுகொலை கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பட்டூரில் தென்னினிந்திய பார்வர்ட் ப்ளாக் கொடி கம்பத்தை நட கரிகாலன் தலைமையில் குணபாலன் என்பவரால் முயற்சி மேற் கொள்ளப்பட்டது.
ஜாதி அமைப்புகளை அனுமதிக்க மாட்டோம் என்று படுகொலை செய்யப்பட்ட சபரீஸ்வரன் உள்ளிட்ட தோழர்களும் பொது மக்களும் எதிர்த்துள்ளனர்.
இதை மனதில் கொண்டு 31.7.18 ல் நடந்த ஜல்லிக்கட்டிற்க்கு போன ஈஸ்வரன் உள்ளிட்ட இளைஞர்களை "பறைத் தாயோழிகளா கள்ளர்கள் நடத்துற ஜல்லிக்கட்டிற்க்கு நீங்க ஏண்டா வந்தீங்க " என்று மிரட்டி கொலை வெறி தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள்.


அதிலிருந்து தப்பித்த இளைஞர்களை நேற்று மாலை தென்னிந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியை சார்ந்தவர்கள் கொலை செய்ய திட்டமிட்டு பின்தொடர்ந்து வந்து ஈஸ்வரனை 7 இடத்தில் குத்தி கொன்றனர்.

கொலை செய்த இடத்திலிருந்தே கரிகாலன் என்பவருக்கு போன் செய்து "நீங்க சொன்ன மாதிரியே முடிச்சிட்டோம் " என்றனர்.

கொலை குற்றவாளிகள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. களத்தில் போராடிய விடுதலை சிறுத்தைகள் தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

பாதிக்கப்பட்ட மக்களை திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சந்தித்து ஆறுதல் சொல்லியும் - சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் துறையிடம் கூறி வந்துள்ளோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக