சு.சாமி :“திமுக கூட்டத்தில் கட்சி தலைவர் அமித் ஷா கலந்து கொள்ள வேண்டாம் என முடிவெடுத்துள்ளார் என்பது குறித்து அறிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது”
மாலைமலர் :சென்னையில் நடக்க உள்ள கருணாநிதி நினைவேந்தல்
கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்பதாக திமுக வட்டாரத்தில் கூறப்படும் நிலையில், சுப்பிரமணிய சாமி ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனத்தில் வரும் 30-ம் தேதி நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், அமித் ஷா கலந்து கொள்ள உள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், “திமுக கூட்டத்தில் கட்சி தலைவர் அமித் ஷா கலந்து கொள்ள வேண்டாம் என முடிவெடுத்துள்ளார் என்பது குறித்து அறிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி ட்வீட் செய்துள்ளார்.
அமித் ஷா பங்கேற்கவில்லை என்றால் அக்கட்சி சார்பாக பொன் ராதாகிருஷ்ணன் அல்லது தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்கலாம் என்றும் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக