ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

மியான்மார் மீது அமேரிக்கா பொருளாதார தடை விதித்தது .. ரோஹிங்கா மக்கள் மீதான கொடூர தாக்குதல்கள் ..

ரோஹிங்கியா பிரச்சினை : மியான்மர் மீது பொருளாதாரத்தடை!மின்னம்பலம்: மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்களின் மனித உரிமைகளை அந்நாட்டின் அரசு தொடர்ந்து மீறி வருவதைக் கண்டித்து அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீஸ் கமாண்டர்கள் மீதும் பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
ரோஹிங்கியா முஸ்லீம்களில் ஒரு பகுதியினர் அந்நாட்டின் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் மியான்மர் அரசு ரோஹிங்கியா முஸ்லீம் மக்கள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரோஹிங்கிய முஸ்லீம்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான வங்கதேசம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் மியான்மரிலுள்ள முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் குண்டு மழை பொழிந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டில் தொடங்கிய தாக்குதலினால், இதுவரை 7லட்சம் மக்கள் வங்கதேசத்திலும் இந்தியாவிலும் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஐநா அறிவித்துள்ளது. ஆனால் தற்போது ட்ரம்ப் அரசு அறிவித்துள்ள பொருளாதாரத்தடைகள் மியான்மரின் ராணுவத்தின் உயர் அதிகாரிகளை தாக்கவில்லை. ரோஹிங்கியா முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் பிரச்சாரத்தை பற்றியும் அமெரிக்க அரசு கண்டு கொள்ளவில்லை.
இது வரை நடந்த தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்கா தீவிரமான விசாரணை நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது. அந்த விசாரணையானது வரும் 25ம்தேதிக்குள் முடிக்கப்பட்டு அதன் அறிக்கையானது வங்கதேசத்தில் முகாம்களில் வாடும் அகதிகளை பேட்டி கண்டு தொகுக்கப்பட உள்ளது. அடக்குமுறை தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைவதையொட்டி அறிக்கையானது 25ம்தேதியன்று வெளியிடப்பட உள்ளதாக அமெரிக்க அரசின் செயலர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக