வேப்துனியா :கேரள மாநிலத்தில் கனமழை பெய்து
வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது உடமைகளை
இழந்து தவித்தனர். கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதி இந்தியா
மட்டுமன்றி உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து வந்தது.மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி வெள்ள
நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம்
கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.700 கோடி அறிவித்தது என்ற செய்தி
வெளியானது.ஆனால், கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய
அரபு அமீரகம், ரூ.700 கோடி வழங்குவதாக அதிகாரப் பூர்வமாக
அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிதியுதவி செய்யலாம் என்பதை அடுத்த சில
நாட்களில் வளைகுடா நாடுகள் முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாடு வாழ் தொழிலதிபர் எம்.ஏ. யூசுப் அலி பக்ரீத் பண்டிகையின்போது வாழ்த்து கூற அரபு அரசரை சந்தித்தார். அப்போது அவர் யூசுப் அலியிடம் கேரளத்துக்கு ரூ 700 கோடி நிதியதவி வழங்குவதாக தெரிவித்தாராம்.
அதை யூசுப் அலி என்னிடம் கூறினார். உடனே நான் இதுகுறித்து பத்திரிகை செய்திகளுக்கு அறிவிக்கலாமா என கேட்டேன். அவரும் அறிவித்து கொள்ளுங்கள் ஒன்றும் பிரச்சினை இல்லை என்றார். அதன்பேரில் எனது டுவிட்டர் பக்கத்திலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூறினேன் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக