சனி, 11 ஆகஸ்ட், 2018

கலைஞரின் உதவியாளர் நித்தியா .. 24 மணி நேரமும் கலைஞரை பார்த்து கொண்டவர்..

கருணாநிதியின் நிழல்… யார் இந்த நித்யா…?விகடன் :மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார். .
அப்போது அவருடைய குடும்பத்தினர் பலரும் இறுதி மரியாதை செலுத்த கடைசியாக வந்து அஞ்சலி செலுத்தியவர் நித்யா.
WhatsApp_Image_2018-08-09_at_4.57.59_PM_17563  கருணாநிதியின் நிழல்… யார் இந்த நித்யா…? WhatsApp Image 2018 08 09 at 4 இவர்தான் சில வருடங்களாக கலைஞர்  கருணாநிதிக்கு மிக நெருக்கமான உதவியாளராக இருந்த கவனித்துக்கொண்ட உதவியாளர்,
கலைஞரின்  கோபாலபுரம் வீட்டிலேயே தங்கி இருந்து அவருக்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்தது நித்யா தான்.
விகடன் 90 இதழில் கலைஞர்  அளித்த பேட்டியில், ‘எனக்குத் தனியாக செல்போன் இல்லை; யாரிடம் பேச வேண்டும் என்று நினைக்கிறேனோ அவர்களுக்கு என்னுடைய உதவியாளர் நித்யாவின் போனில் இருந்து தான் பேசுவேன்’ என்று கூறி இருந்தார். முன்னாள் முதல்வராக இருந்த கலைஞருக்கு  எல்லாமுமாக இருக்கும் அந்த நித்யா யார் என்ற கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. அதற்கு விடை காணவே இந்தக் கட்டுரை.
கலைஞரோடு எப்போதும் கூடவே இருந்தவர்கள் இரண்டு பேர்.
ஒருவர் அவரது செயலாளர் சண்முகநாதன், பல ஆண்டுகளாக அவருடைய செயல்திட்டங்களுக்கு எல்லாம் செயல்வடிவம் கொடுத்தவர். இன்னொருவர் நித்யா. குடும்ப உறுப்பினர்கள்,
கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களைவிட இவர்கள் இருவரும் தான் கலைஞரின்  நிழலாக இருந்தவர்கள். கலைஞர் வீட்டில் இருந்து வீல் சேரில் ஏற்றி விழா நடக்கும் இடத்தில் அமர வைப்பது முதல், பர்சனல் உதவிகள் செய்வது வரை எல்லாமே நித்யா தான். நித்யா (எ) நித்யானந்தன்..
நித்யாவின் இயற்பெயர் நித்யானந்தன். பல்லாவரத்தைச் சேர்ந்தவர். பி.காம் பட்டதாரி.
p3_14415  கருணாநிதியின் நிழல்… யார் இந்த நித்யா…? p3 14415கலைஞர்  முதல்வராக இருந்த சமயத்தில் அவருக்கு கறுப்புப் பூனைப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டது. கலைஞர்  செல்லும் காருக்கு முன்பாகச் செல்லும் கருப்புப் பூனைப்படை கார்களுக்கு தனியார் ட்ராவல்ஸ் டிரைவர்கள்தான் கார் ஓட்டுவார்கள்.
அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் ரமேஷ், பின்னாளில் அவர் கலைஞர்  காருக்கே ’சாரதி’ ஆனார். அவர் மூலமாக கலைஞருக்கு  அறிமுகமானவர்தான் இந்த நித்யா. முதலில் சிறுசிறு வேலைகள் செய்து வந்த நித்யா, பின்னர் கலைஞரின்  உதவியாளராகப் பணி அமர்த்தப்பட்டார். ஒருமுறை கருணாநிதிக்கு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. முதுகில் செய்யப்பட்ட அந்த ஆப்ரேஷன் காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக ஓய்வில் இருந்தார் கலைஞர். அப்போதும், இரவும் பகலுமாக அருகில் இருந்து பார்த்துக்கொண்டது இந்த நித்யாதான்.
மருத்துவமனையில் நடந்த விஷயங்களை டைரிக் குறிப்புகளாகத் தொடர்ந்து கலைஞர்  வெளியிட்டார். அதில் கவனித்துக்கொண்ட நர்ஸ்களின் பெயர்களோடு, ‘என் தனி உதவியாளர் நித்யாவும் கடந்த ஒரு மாத காலமாக என்னைவிட்டு அங்கும் இங்கும் அகலாமல் ஆற்றிய பணிகளை இந்தத் தொடரிலே குறிப்பிட்டே ஆக வேண்டும்!’ என்று சொல்லி இருந்தார். அப்போதில் இருந்துதான் நித்யா மீது ‘லைம் லைட்’ விழுந்தது என்கிறார்கள் கட்சியினர்.
 நித்யா வீட்டுக்குச் சென்ற கருணாநிதி அருந்ததியருக்கு மூன்று சதவிகித உள்ஒதுக்கீட்டை வழங்கிய பிறகு, துணை சபாநாயகர் வி.பி.துரைசாமியின் இல்லத் திருமணத்தில் பேசிய  கலைஞர் , ”என்னிடம் வேலை பார்க்கிற உதவியாளர் நித்யா, அருந்ததியர் சமுதாயத்தவர். இந்தப் பையன் எனக்கு சினேகிதன் என்று சொல்வது எனக்குப் பெருமை…” என்றார்.

இன்னொரு சந்தர்ப்பத்தில், ”24 மணி நேரமும் அணுக்கத் தொண்டனாக இருந்து என்னைக் கவனித்துக் கொள்வதே இந்த இளைஞன்தான்!” என்றும் சொன்னார்.
கலைஞர் முதல்வராக இருக்கும் போது புறநகரில் இருந்த வேல்ஸ் பல்கலைக்கழக விழாவுக்கு கலைஞர் சென்றபோது, பல்லாவரத்தில் நித்யாவின் வீட்டுக்கும் வந்தார். அப்போது, நித்யா தன் வீட்டருகில் அண்ணா சிலையை அமைத்திருக்க… அதைத் திறந்துவைத்து, ‘என் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாத்து வரும் நித்யா அளித்துள்ள இந்த வரவேற்புக்கு நன்றி…’ என்று பேசினார். அந்த விழாவில் நித்யா செங்கோல் ஒன்றை பரிசளிக்க அதை இன்முகத்தோடு வாங்கிக் கொண்டார் கலைஞர் .

இது கட்சியில் சில சீனியர்களுக்கே கிடைக்காத பெருமை. இதில் நித்யாவின் இமேஜும் கட்சிக்குள் அதிக அளவில் உயர்ந்தது. நித்யா ஆதரவுபெற்ற வேட்பாளர் கருணாநிதி!
கலைஞர்  முதல்வராக இருந்த காலத்தில், கட்சிப் பதவிகள் தொடங்கி, சுகாதாரத்துறை இணை இயக்குநர் பதவிகள் வரை நித்யாவுக்கு வேண்டப்பட்டவருக்கு கிடைத்திருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
அப்போதும் சரி, இப்போதும் சரி, ’தலைவர் என்ன மூடில் இருக்கிறார்?’ என்று இவரிடம் கேட்டுக்கொண்டுதான் கட்சியின் சீனியர்களே கலைஞரை  வந்து சந்திப்பார்களாம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட பல்லாவரம் பகுதியில் கருணாநிதி என்கிற வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
அந்தப் பெயரை பரிந்துரைத்தது நித்யா. அவரை மாற்றக்கோரி ஸ்டாலினும், தா.மோ.அன்பரசனும் சென்று கலைஞரை நேரில் சென்று சந்தித்து இருக்கிறார்கள். அப்போது டென்ஷனான கலைஞர் , ‘ என் கூடவே இருந்து என்னைக் கவனித்துக் கொள்வது நித்யா தான். அவன் சொன்ன ஆள் தான் அங்கு வேட்பாளர். வேறு எங்கு வேணாலும், யாரை வேணாலும் மாற்றிக்கொள்ளுங்கள். பல்லாவரம் வேட்பாளரை மட்டும் மாற்றக்கூடாது’ என்று கறாராகச் சொல்லிவிட்டாராம். அந்த அளவுக்கு கலைஞர் மனதில் நித்யாவுக்கு இடம்  உண்டு.

அதனால்தான் கலைஞர்  குடும்பத்தினர் இறுதி மரியாதை செய்தபோது நித்யாவும் அவர்களில் ஒருவராக மரியாதை செய்தார்.

கலைஞர்  உயிருடன் இருந்தபோது அவருக்கு எல்லாமுமாய் இருந்தவர் நித்யா. காலையில் கண்விழித்ததில் தொடங்கி இரவில் கண் மூடும்வரை கலைஞருடனேயே  இருப்பதில்தான் நித்யாவின் நாட்கள் கழியும். ‘
WhatsApp_Image_2018-08-09_at_4.56.51_PM_17380  கருணாநிதியின் நிழல்… யார் இந்த நித்யா…? WhatsApp Image 2018 08 09 at 4
இதைச் செய்து கொடு நித்யா’ என்று கலைஞரே  கேட்காத ஒரு நாளை அவர் எவ்வளவு வலியுடன் கடந்திருப்பார் என்பதை இந்தப் புகைப்படம் சொல்கிறது. இனி வரும் நித்யாவின் நாட்கள் எப்படிக் கழியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக