புதன், 15 ஆகஸ்ட், 2018

கிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி ரேப் - கார் டிரைவர் வாக்குமூலம்

கிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்மாலைமலர் : சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து கத்திமுனையில் மிரட்டி கற்பழித்த கார் டிரைவர் சிக்கினார். சென்னை: சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து ஒரு கும்பல் காரில் கடத்தி கற்பழிப்பதாகவும், அவர்களிடம் நகைகளை கொள்ளையடிப்பதாகவும் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக யாரும் புகார் அளிக்காத நிலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் புகார் அளித்தார். நீலாங்கரை போலீஸ் இன்ஸ் பெக்டர் நடராஜன் மற்றும் பெண் போலீசார் அடங்கிய தனிப்படையினர் பெண் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். காரில் ஏமாற்றி அழைத்துச் சென்று ஆள் நட மாட்டம் இல்லாத இடத்தில் வைத்து வாலிபர் ஒருவர் காருக்குள்ளேயே வைத்து கற்பழித்து விட்டதாக திடுக்கிடும் தகவலை அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து உஷாரான போலீசார் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக துப்பு துலக்கினர்.

பாதிக்கப்பட்ட பெண் புத்திசாலித்தனமாக செயல்பட்டு கார் நம்பரை குறித்து வைத்துக் கொண்டு போலீசிடம் கொடுத்திருந்தார். அதனை வைத்து விசாரணை நடத்திய போலீசார் குறிப்பிட்ட காரை ஓட்டி வந்த டிரைவர் சுரேசை மடக்கி பிடித்தனர்.
கால்டாக்சி டிரைவரான அவர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், அடையாறு, திருவான்மியூர், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. சாலை யோரமாக நடந்து செல்லும் நடுத்தர வயதைச் சேர்ந்த திருமணமான பெண்களை குறி வைத்து காரில் ஏமாற்றி அழைத்துச் சென்று சுரேஷ் கற்பழித்து இருப்பது தெரியவந்தது.
சுரேஷ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
வேறு ஒருவருக்கு சொந்தமான கால் டாக்சியில் வாடகை ஓட்டுனராக பணி புரியும் எனக்கு திருமணமான பெண்கள் மீது எப்போதுமே ஒரு கண் உண்டு. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் சாலையில் நடந்து சென்றால் அவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்து காரில் ஏற்றுவேன்.
அவர்கள் என்னை நம்புபடி பேசிக் கொண்டே காரை ஓட்டிச்செல்வேன். ஒதுக்குப்புறமான இடம் பார்த்து காரை நிறுத்தி விட்டு ஏ.சி.யை முழுவதுமாக ஓட விடுவேன். பின்னர் கார் கண்ணாடிகளை ஏற்றி விட்டு பின்னால் அமர்ந் திருக்கும் பெண்ணிடம் சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டுவேன்.
இதனால் பயந்து போய் ஒரு சிலர் சத்தம் போட மாட்டார்கள். அப்படியே யாராவது சத்தம் போட்டாலும் கண்ணாடிகள் முடி இருப்பதால் அது வெளியில் கேட்காது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு காருக்குள் வைத்தே அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளேன்.
கடந்த ஓராண்டாக இது போல சுமார் 10 பெண்களிடம் கைவரிசை காட்டியுள்ளேன். எல்லாம் முடிந்த பின்னர் பெண்கள் அணிந்திருக்கும் நகைகள் அனைத்தையும் பறித்துக் கொள்வேன்.
இதுபோன்று பாதிப்புக் குள்ளானவர்கள் புகார் எதுவும் கொடுக்காததால் தப்பி வந்தேன்.
இவ்வாறு சுரேஷ் போலீசிடம் கூறியுள்ளார்.
கண்ணகி நகரைச் சேர்ந்த சுரேஷ் மீது கற்பழிப்பு வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்சென்னை இணை கமி‌ஷனர் மகேஸ்வரி, அடையாறு துணை கமி‌ஷனர் சசாங்ஷாய் ஆகியோரது மேற்பார்வையில் தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு சுரேசை கைது செய்துள்ளனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவனை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் அண்டு 15 வயது சிறுமியை கற்பழித்த வழக்கும் சுரேஷ் மீது உள்ளது.
இந்த வழக்கில் புகார் அளித்துள்ள பெண் சாலையோரமாக கடை வைத்திருப்பவர் என்று போலீசார் தெரிவித்தனர். முதலில் புகார் அளிக்க தயங்கிய அவரிடம் பெண் போலீசார் நீண்ட நேரமாக விசாரணை செய்து சுரேஷ் நடத்திய லீலைகளை அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளனர். சுரேசால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது இருந்தால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இப்படி புகார் அளிக்கும் பெண்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்படாது என்றும் அவர்கள் பற்றிய ரகசியங்கள் காக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக