ஞாயிறு, 8 ஜூலை, 2018

ப.சிதம்பரம் பங்களாவில் கொள்ளை!

ப.சிதம்பரம் பங்களாவில் கொள்ளை!மின்னம்பலம் :முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தின் வீட்டில் பல கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரத்தின் இல்லம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பைகிராப்ட்ஸ் கார்டன் சாலையில் அமைந்துள்ளது. சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றுள்ள நிலையில், அவரது வீட்டில் இருந்த ரூ.1.10 லட்சம் பணம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பழங்கால நகைகள் கொள்ளைபோயுள்ளன, தங்கம், மரகதம், மாணிக்கம் உள்ளிட்ட நகைகள் கொள்ளை போயுள்ளதாக ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்கள் மீது சந்தேகம் இருப்பதாகப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் வீட்டில் போலீசார் நேரில் நடத்திய விசாரணையில் பீரோ உடைக்கப்படாமல் நகை, பணம் திருட்டுபோனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் கடந்த வியாழக்கிழமை முகத்தை மறைத்துக்கொண்டு ஒருவர் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள் 2 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக