வெள்ளி, 13 ஜூலை, 2018

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ மனு! வேதாந்தா வழக்கில் என்னையும் மனுதாரராக சேருங்கள்.

tamil.oneindia.com/kalai-mathi.:டெல்லி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தேசிய
பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கிராம மக்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து கடந்த மே மாதம் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது. தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி வேதாந்தா குழுமம் தெரிவித்தது.

ஆனால் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனுத்தாக்கல் செய்துள்ளார். வேதாந்தா நிறுவன வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்க்கக் கோரி வைகோ தனது மனுவில் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக