வியாழன், 12 ஜூலை, 2018

பாராளுமன்றத்தில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவ கோரிக்கை நிறைவேறியது சிவா எம்.பி.

பாராளுமன்றத்தில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவ கோரிக்கை நிறைவேறியது சிவா எம்.பி.தினத்தந்தி : திருச்சி சிவா எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தி.மு.க. தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
திருச்சி சிவா எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தி.மு.க. தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதன் விளைவாக 17 மாநில மொழிகளில் பட்டியலில் மேலும் 5 மாநில மொழிகள் புதிதாக சேர்க்கப்பட்டு 22 மொழிகளாக அதிகரித்துள்ளது. இதில் காஷ்மீரி உள்ளிட்ட 5 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தங்களது தாய் மொழியில் பேசினால் அவை மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்தில் மற்றவர்கள் கேட்கமுடியும். மேலும் 5 மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது வரவேற்கத்தக்கது. திருச்சி ஜங்‌ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கான பணியில் ராணுவ நிலத்தை மாநில அரசு கேட்டு பெற வேண்டும். தமிழகத்தில் லே£க்ஆயுக்தா சட்டத்தை வலுவானதாக அமைக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக