வியாழன், 12 ஜூலை, 2018

அமித் ஷா :விருந்தாளிகளை வரவேற்றால் தான் சொர்க்கம் கிடைக்கும்

ஆலஞ்சியார் : விருந்தாளிகளை வரவேற்றால் தான் சொர்க்கம்
கிடைக்கும்..அமித்ஷா..
விருந்தாளி என்ற பெயரில் விஷம் கொண்டு வருகிறவனிடம் பாசம் காட்ட முடியாது பகைதான் காட்டமுடியும்.. வாயை திறந்தாலே பொய் .. ஊழலற்ற ஆட்சியாம்... சொல்கிறவரின் மகன் ஒரே வருடத்தில் 10000 மடங்கு பணம் சம்பாதித்த கதை தெரியாமல் இல்லை.. சொல்கிறவர் தலைமையில் செயல்படும் கூட்டிறவு வங்கியில் ஒரே வாரத்தில் ₹740 கோடி கருப்புபணம் முதலீடு செய்யபட்டதே அதற்கென்ன பெயர்...ஒருவன் ₹2000 கோடி பணத்தோடு பிடிபடுகிறான் .. மக்கள் ₹2000 ரூபாய்க்கு தெருவில் அல்லாடியபோது இவனுக்கு மட்டும் எங்கிருந்து வந்தது.. கரூரில் ₹500 கோடி கண்டெய்னர் பணம் .. எங்கிருந்து வந்தது போலீஸ் பாதுகாப்பில்லாமல் ₹10 கோடிக்கு மேல் பண இடமாற்றம் செய்யகூடாதென்ற விதி இருக்கும் போது .. போலியான வாகன எண்ணில் பணம் கடத்தபட்டதே யாருடையது இதெல்லாம் ஊழலில் சேராதா.. இந்தியா கண்ட மிக மோசமான ஆட்சி மோடி உடையதென்று விவரம் தெரிந்தவர்கள் கதைக்கிறார்களே ஏன் பதிலில்லை..
மாட்டிறைச்சி விற்றதாக மனிதனை அடித்து கொன்ற மிருகத்தை சிறையிலிருந்து வெளியே எடுத்து மாலை மரியாதை செய்கிற மத்திய அமைச்சர்.. இதற்கு பெயர் நல்லாட்சியா.. தமிழகத்தில் ஊழல் அதிகமாகிவிட்டதென்கிற அமிர்ஷா மகன் ₹5 முதலீடு செய்து ஒரே வருடத்தில் ₹500கோடி சம்பாதித்த கதையெல்லாம் தமிழக மக்கள் அறிவார்கள்.. மோடி அருண்ஜெட்லி கூட்டணியால் மூன்று லட்சத்து எழுபதிதைந்தாயிரம் கோடி (₹375,0000000000) இழப்பு என்கிறார் பாஹகவின் யஷ்வந்த் சின்ஹா ..இதெற்கெல்லாம் என்ன பதில்
..
பாஜக ஆட்சிகள் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக இங்கு வந்து பொய் சொல்கிறார்.. இன்றைய times of india வில் கூட பெண்களுக்கெதிரான குற்றங்கள் 2014 க்கு பிறகு அதிகரித்திருப்பதாக எழுதியிருக்கிறது..
தாம்சன் ராய்டர் நிறுவனம் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களில் இந்தியா முதலிடம் என்ற ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறது
பச்சிளம் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி கொலை செய்யபடுகிறார்கள்.. மனித உயிர்களைவிட மாடு முக்கியமாக போனது.. இதெல்லாம் வேறு மாநிலத்தில் பேசியிருந்தால் ஒருவேளை பயத்தில் கைதட்டு கிடைத்திருக்கலாம்.. இது ஏன் எப்படி என்று கேட்கும் நாடு... வேறெங்காவது புளுகுவதை வைத்துக்கொள்ளுங்கள்..
..
வரவேற்பது தமிழனின் பண்புதான்.. நல்லவனை நாகரீகம் தெரிந்தவனை நல்லதை விதைக்க வந்தவனை நாணயமானவனை வரவேற்போம்.. நெஞ்சில் நஞ்சை கொண்டு சாதி மத மோதலை உருவாக்க வஞ்சகத்தோடு வலம் வர எண்ணினால் இந்த இழிநிலைதான் வரும் .. விரட்டுவது மட்டுமல்ல வீழ்த்தும் வரை ஓயமாட்டோம்.. இது தமிழ் மண்..
இங்கே இஸ்லாமியனுக்கும் இந்துவுக்கும் கிரிஸ்துவனுக்கும் இடையில் கலகமூட்டலாமன்று எண்ணி வந்தால் வாசலில் வெளக்கமாறோடு நிற்போம் இங்கே தமிழனாய் சாதி மதம் மறந்து ஒன்றிணைந்து நிற்போம்..
..
திமுகவை தவிர மற்ற கட்சிகளோடு கூட்டணி சேர விருப்பமென்கிறார் அதாவது தயாராக இருக்கிறார்களாம்.. வக்கற்றவன் வகையற்றவனோடு கூட்டு சேருவது தானே சரி..
சாதிவெறிக் கொண்டு இளைஞர்களை வழிகெடுக்கும் மாங்காய் மடையர்கள் எப்போது அழைப்பாரென காத்திருப்பது தெரிகிறது .. வேறுவழியேயின்றி அடிமைகளும் சேரலாம்.. நவீன பார்பனீய அடிமைகள் தங்களை புனிதராக்கிக்கொள்ள நாடலாம் பிறகு தான் தெரியும் மதியாதவர் வாசல் வந்து அவமானபட போவதை காலம் கடந்து தெரிந்து கொள்வர்..
ஒன்றுமட்டும் உறுதியாய் தெரிகிறது இருக்கிற மரியாதையும் இழந்து முகமிழந்து போக போகிறார்கள் பாஜகவோடு கூட்டு சேர நினைப்பவர்கள் .. திமுக சரியான பாதையில் செல்வதை இன்றைக்கு பாஜக தலைவரின் பிரசங்கம் உணர்த்தியிருக்கிறது.. பெரியாரின் வழியில் அண்ணாவும் கலைஞரும் செப்பனிட்ட பாதையில் பாசிசத்தை வேரறுக்க தளபதி தலைமையில் களம் காண்போம் ..
..
இனி வெற்றி ஒன்றே நமது இலக்கு
..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக