புதன், 4 ஜூலை, 2018

கச்சநத்தம் .. காலா .. அரசியல் அதிகாரத்தைப் பணிய வைக்கும் சமூக அதிகாரம்

Kathiravan Mumbai : o காலா: சேரி வாழ்வும், நில உரிமையும், விமல் பிரகாஷ்
"அந்த ‘கெயிக்வாட்’ என்ற சாதிப்பெயரைக் குறிப்பிட வேண்டியதின் அவசியம் என்ன? ரஜினியைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்று அடையாளப்படுத்தவா? அப்படி என்றால் தன்னை ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தியின் ஆதரவாளராகவும், ஆன்மீக அரசியல்வாதியாகவும் வெளிப்படை யாகவே காட்டிக்கொள்ளும் ஒருவரை எதற்காக தலித்தாக அடையாளப்படுத்த வேண்டும்."
o கச்சநத்தம்:
அகமுடையார்களின் பார்ப்பனியம் நடத்திய படுகொலைகள்
- இராவணன் - இளையான்குடி தங்க.செங்கதிர், தியாகி இமானுவேல் பேரவை - காளையார்கோவில் முத்துக்குமார், திராவிடர் விடுதலைக் கழகம்
“டேய் பள்ள...... மவனே... நான் வருகிறேன் எழுந்திருக்க மாட்டாயா?” என்பது, இவர்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளைத் திருடிச் செல்லுவது, விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பது, பால் பண்ணையில் பாலை எடுத்துச் செல்வது, பஞ்சாயத்து தேர்தல்களில் அரசியல் கட்சிகளில் இருப்பவர்களை வேட்பாளர்களாக்கிவிட்டு மக்கள் வாக்களிக்க வில்லை எனவே பணம் நிறைய செலவு செய்ததாகக் கூறி வீடு, நிலம் ஆகியவற்றைக் கொடு எனப் பிடுங்கிக் கொள்வது, மிகக் குறைந்த நிலத்தை வைத்துக் கொண்டு குறிப்பாக மூன்று மணி நேரத்தில் நீர் பாய்ச்சப்படும் வயலுக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் வாய்க்காலை அடைத்துக் கொள்வார்கள், அவர்களாகப் பார்த்து திறந்தால் மட்டுமே நீர் பாய்ச்ச முடியும் என்ற நிலை உள்ளது."

o செளபாவின்
மரணம் தரும் படிப்பினைகள் - குழந்தை வளர்ப்பில் நாம் அறிய வேண்டிய சில உளவியல் கூறுகள் - முனைவர் பூ.மணிமாறன்
"குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் பெற்றோர்கள் இது குறித்தான தகவல்களை முழுவதுமாக அறிந்திருக்க வேண்டும். ஆனால் மெத்தப் படித்த அறிவு ஜீவிகளாக உள்ள பெற்றோர்கள் உயர் பதவிகளில் இருப்போர் கூட, இது போன்ற மனவியல் கூறுகளை அறிந்திருப்பதில்லை. அறிய விழைவதும் இல்லை."
o வர்ணாசிரமக்
காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு - நூலாசிரியர்: பெல் ஆறுமுகம் - நூல் அறிமுகம்: பொள்ளாச்சி விஜயராகவன்
"‘சங்கராச்சாரி’ பதவியில் ஓராண்டுக் காலத்திற்கு அமர்த்த வேண்டும். மனம் மாறியதற்கும் சமத்துவத்தை ஏற்றுக்கொண்டதற்கும் அடையாளமாக ஒரு நூறு சித்பவன் பார்ப்பனக் குடும்பங்கள் புதிய சகத் சங்கராச்சாரியின் காலில் விழுந்து வணங்க வேண்டும்.”
o பெரியார்நாடும் தமிழ்நாடும் - அதி அசுரன்
"அன்றைய ஆர்.எஸ்.எஸ் ஆன இந்து மகா சபையின் நிறுவனர் மூஞ்சே நேரடியாகப் பெரியாரைச் சந்தித்து திராவிடநாடு கோரிக்கைக்கு ஆதரவளித்தார். இந்தியா முழுவதும் திராவிடநாடாக அறிவிக்க முயற்சி செய்வதாகக் கூறினார். அது தொடர்பாக ஒரு குறைந்தபட்சச் செயல்திட்டம், பொது உடன்பாடுகூட உருவாக்கப் பட்டது. ஆனால் அது செயலுக்கு வரவில்லை. அந்தப் பொதுச் செயல்திட்டம்:"
o ஒண்டிவீரனைக் கைவிடுவோம் - கோபி அர்ஜூன்
"அருந்ததிய அமைப்புகள் மட்டுமல்ல; கவுண்டர், செட்டியார், வன்னியர், தேவர் என அனைத்துப் பிற்படுத்தப்பட்ட ஜாதி அமைப்புகளுமே இந்தத் தவறைச் செய்கின்றன. ஜாதிக்கொரு மன்னரைத் தேர்ந்தெடுத்து, அவரின் புகழ் பாடிக்கொண்டி ருக்கிறோம். இந்து வெறி அமைப்புகள் சுலபமாக, அந்த மன்னர்களையே கடவுளாக்கி நம்மை அழிக்கத் திட்டமிடுகிறார்கள். வடமாநிலங்களில் இந்தத் தந்திரத்தால்தான் வெற்றி பெற்றார்கள். அந்தத் தந்திரத்தை இன்று அருந்ததியர்கள் வரை நீட்டித்திருக்கிறார்கள்."
o ‘நிலம்’ அதிகாரமா? ‘பூணூல்’ அதிகாரமா? - அதி அசுரன்
"இருவகை வாழ்விட இழிவுகளில் இருந்து சாதி ஒழிப்பாளர்கள் என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும் அவசியம் வெளியேற வேண்டும். கிராமங்களில் அசையாச் சொத்துக்களை வைத்திருந்தால்கூட, அவற்றைப் பரம்பரைச் சொத்து, பாட்டன் சொத்து என்பது போன்ற தயவு தாட்சண்யங்கள் எவையும் இன்றி, விற்பனை செய்துவிட்டு, தங்கள் ஜாதியினர் வாழாத பிற பகுதியில் சொத்துக்களை வாங்கிக் கொண்டு மானத்துடன் வாழ முயற்சி செய்ய வேண்டும். விற்பனை செய்யவே இயலாத நிலை உள்ளவர்கள், அந்த நிலங்களில் தாழ்த்தப்பட்டவர் களும், பிற்படுத்தப்பட்டவர்களும் கலந்து வாழ வழிசெய்ய வேண்டும்."
o அரசியல் அதிகாரத்தைப் பணிய வைக்கும் சமூக அதிகாரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக