புதன், 18 ஜூலை, 2018

அயனாவரம் சிறுமி பாலியல் வன்முறை ... பல கேள்விகள் ???

Devi Somasundaram: டவுட்கள் !
 1. சென்னைல யாரும் தன் அபார்ட் மெண்டை திறந்து போடுவதில்லை. அபார்ட்மெண்டில் காலியாக இருந்த வீட்டில் தான் வன்புணர்வு செய்யபட்டதாக சொல்ல படுகிறது....அப்படி யார் 7 மாதம் தன் வீட்டை கண்டுக்காம திறந்து போடுகிறார்கள் ? .
2 ..மயக்க ஊசி போட்டா திரும்ப தெளிய குறைந்த பட்சம் 4 மணி நேரம் ஆகும்..அத்தனை மணி நேரமா விளையாட அனுமதித்து தேடாமல் இருந்திருப்பார்கள்..அதும் 7 மாதமா. ..டெய்லி 4. மணி நேரம் குழந்தை காணா போவதை கண்டு பிடிக்கலயா.. அசந்தர்ப்பமா கூட அவள் தேட படலயா? .
3 .மயக்க மாத்திரை தந்தால் அது தொடர்ச்சியா மயக்கத்தில் வைக்கும்..பள்ளியிலோ, வேனிலோ, பக்கத்து வீட்டிலோ கவனிக்காமலா இருந்திருப்பார்கள் ?
4..மயக்க ஊசி அவ்வளவு எளிதாக சந்தையில் கிடைக்காது..மெடிக்கல் ப்ராக்‌டிஷ்னர் அனுமதி இல்லாம வாங்க இயலாது .யார் அனுமதித்தது .எந்த கடையில் வாங்கினார்கள்..அவர்கள் கைது செய்ய பட்டனரா ? .
5..18 ல் இருந்து வகை வாரியா வயது நம்பர் தர பட்டுள்ளது. சின்ன பையனுக 7 மாதமா ஒளறாம இருப்பார்களா...தண்ணி போட்டா நண்பர்கள் கிட்ட ஒளறிடுவானுக..
6...எதோ இந்த சம்பவத்தில் சரி இல்லன்னு உள்ளுணர்வு சொல்லுது ....எதுன்னு சொல்ல தெரில..
7 ..pocso act..நான் பெயிலபிள். .ஒரு வருடத்தில் கேஸ் முடித்து தீர்ப்பு வழங்கியாகனும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக