சனி, 28 ஜூலை, 2018

பிரகாஷ் ராஜ் கண்டனம் .. அறிவுஜீவிகளை , முற்போக்குவாதிகளை சுட்டு கொல்லவேண்டும் பாஜக எம் எல் ஏ பசன கவுடா

tamil.thehindu.com
பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் , நடிகர் பிரகாஷ் ராஜ்   -  படம்: ஏஎன்ஐ
நாட்டில் அறிவுஜீவிகளை எல்லாம் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பேசிய பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யட்னாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மோட்டார் வாயை மூடுங்கள் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பிஜப்பூர் மாவட்டம், விஜயபுரா தொகுதி எம்எம்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னா. இவர் நேற்று விஜயபுரா நகரில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “நாட்டில் உள்ள அறிவுஜீவிகளும், முற்போக்குவாதிகளும் தேசவிரோதிகள். இந்த நாட்டில் அறிவுஜீவிகள் வாழ்ந்து கொண்டு, நாம் செலுத்துவரியில் அனைத்து வசதிகளையும் அனுபவிக்கிறார்கள். பின் நம்முடைய நாட்டுக்கு எதிராகவே கோஷங்களை எழுப்புகிறார்கள். இதுபோன்ற மனிதர்களிடம் இருந்து தேசம் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்குகிறது.

நான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால், இந்த அறிவு ஜீவிகளை எல்லாம் சுட்டுக்கொல்வதற்கு உத்தரவிடுவேன் எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
கடந்த 1994 முதல் 1999 ஆம் ஆண்டில் பாஜகவில் எம்எல்ஏவாக இருந்தவர் யத்னா. 1999 முதல் 2009-ம் ஆண்டு வரை பிஜப்பூர் தொகுதியின் எம்.பி.யாகவும் யத்னா இருந்துள்ளார்.
2002-2004ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில், ஜவுளித்துறை அமைச்சராகவும், ரயில்வேதுறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2010-ம் ஆண்டு பாஜகவில் இருந்துவிலகி மதச்சார்பற்ற ஜனதா தளம் சென்று, பின் 2013-ம் ஆண்டு மீண்டும் பாஜகவில் யத்னா இணைந்தார்.
எம்எல்ஏ யத்னாவின் பேச்சுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
மோட்டார்வாய் வைத்துள்ள மற்றொரு முட்டாள் யத்னா. உங்களால் மூளைச்சலவை செய்யமுடியாத, அறிவுஜீவிகளையும், முற்போக்குவாதிகளையும் உங்களைப் போன்றவர்கள் இப்படித்தான் செய்கிறீர்கள்.
ஹிட்லர், கடாபி,பின்லேடன் போன்றோர் மண்ணோடு மண்ணாகப் போனதை இந்த உலகம் பார்த்திருக்கிறது. பிரதமர் மோடி முதலில் தங்களின் கட்சியின் உறுப்பினர்களின் வாயை மூடச் சொல்ல வேண்டும் அல்லது தொடர்ந்து மவுனமாக இருக்கச் சொல்லுங்கள்
இவ்வாறு பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக