சனி, 28 ஜூலை, 2018

திருவாரூர் திமுக நிர்வாகி தமீம் மாரடைப்பால் உயிரழப்பு ... கலைஞர் மருத்துவ மனையில்...

மாலைமலர் :திமுக தலைவர் கலைஞர்  உடல்நிலை மோசமடைந்ததால் அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகி ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.   திருவாரூர்: தி.மு.க. தலைவர் கலைஞர்  (வயது 94) உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். உடல் நலிவுற்றுள்ளதால் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால், நேற்று இரவு உடல்நிலை மோசமடைந்ததால், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான தகவல்கள் பரவி வருவதால் தொண்டர்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்து வருவதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி தமீம் (50) திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே தமீம் வேதனையில் இருந்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக