மாலைமலர் :திமுக தலைவர் கருணாநிதியுடன் அவரது மகனும்
முன்னாள் மத்திய மந்திரியுமான முக அழகிரி சென்னை கோபாலபுரம் இல்லத்தில்
இன்று சந்தித்தார்.
திமுக
தலைவர் கருணாநிதி தற்போது உலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம்
இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். அவ்வப்போது அண்ணா அறிவாலயம், சிஐடி
காலனி சென்று வருவார். இந்நிலையில், அவரது மகனும் முன்னாள் மத்திய
மந்திரியுமான முக அழகிரி கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தந்தார்.
அங்கு,
கருணாநிதி மற்றும் தாயார் தயாளு அம்மாள் ஆகியோரை சந்தித்து அழகிரி
உடல்நலம் விசாரித்தார். பின்னர், சிறிது நேரம் கழித்து அங்கிருந்து
புறப்பட்டுச் சென்றார். சில நாட்களுக்கு முன்னர், திமுகவில் உண்மை
தொண்டர்கள் தம் பக்கம் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய அழகிரி,
ஸ்டாலின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் என்பது
குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக