மாலைமலர் : இலங்கையில் பாலியல் பலாத்காரம்
குற்றத்திற்காக தன்னை கைது செய்ய வந்த போலீஸ்காரரை புத்த பிட்சு கத்தியால்
குத்தி கொன்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு :
இலங்கையின் தென்கிழக்கு மாகாணமான ரத்னபுராவில் உள்ள கலண்டா பகுதிக்குட்பட்ட
புத்த மத கோவிலில் கொன்வலனே தம்மசாரா தேரா எனும் புத்த பிட்சு வசித்து
வந்துள்ளார். பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததால் அவரை
நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்த புத்த பிட்சுவை கைது செய்ய
அவர் வசித்து வந்த கோவிலுக்கு போலீஸ்காரர் ஒருவர் நிராயுதபாணியாக
சென்றுள்ளார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரரை
குத்தியதில் வலியில் போலீஸ் அதிகாரி அலரியுள்ளார்.
அலரல் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துவிட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த போலீஸ்காரரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, புத்த பிட்சுவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். போலீஸ் ஒருவரை புத்த பிட்சு கொன்ற சம்பவம் இதுவே முதல்முறை என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக