ஞாயிறு, 15 ஜூலை, 2018

வடிவேலு தலைமறைவு ? எலி பட தயாரிப்பாளர் சதீஷ் கைது!


நக்கீரன் -கதிரவன் : 2 கோடி மோசடி வழக்கில் எலி படத்தின் தயாரிப்பாள
சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் நடிகர் வடிவேலு தலைமறைவாக இருப்பதாக தகவல். கடந்த 2015ம் ஆண்டு இயக்குநர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவெலு நடித்த படம் எலி. இப்படத்தின் தயாரிப்பு செலவுக்களூக்கு வடிவேலு பரிந்துரையின் பெயரில் ராம்குமார் என்பவர் படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்க்கு 1.5 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.
எலி படம் எதிர்ப்பார்த்தபடி ஓடாமல் படு தோல்வி அடைந்ததால் தயாரிப்பாளர் சதீஷினால் கடனாக பெற்ற 1.5 கோடியை வட்டியுடன் சேர்த்து 2 கோடி ரூபாயை ராம்குமாருக்கு திருப்பி கொடுக்க முடியவில்லை. ராம்குமார் தொடர்ந்து பணத்தை கேட்டு வரவே, வடிவேலுவிடம் வாங்கிக்கொள் என்று கூறியிருக்கிறார். இதனால் வடிவேலு மற்றும் சதீஷ் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார் ராம்குமார். இந்த புகாரின் பேரில் தயாரிப்பாளர் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் குற்றப்பிரிவு போலீசார். இதற்கிடையில் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள வடிவேலு, மதுரையில் தலைமறைவாக உள்ளதாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக