மின்னம்பலம்:
ஐபிஎல்
மற்றும்
சினிமா போன்ற பொழுதுபோக்குத் துறைகளில் அதிக அளவில் கறுப்புப்
பணம்
புழங்குவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில் அத்துறைகளை
ஒழுங்குபடுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று ஒன்றிய நிதியமைச்சர்
கூறியுள்ளார்.
இதுகுறித்து மாநிலங்களவையில் ஜூலை 24ஆம் தேதி ஒன்றிய நிதியமைச்சரான பியூஷ் கோயல் பேசுகையில், “சினிமா (தயாரிப்பு மற்றும் விநியோகம்), தொலைக்காட்சி மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் போன்ற பொழுதுபோக்குத் துறைகளில் ஒழுங்குமுறை விதிகளைக் கொண்டுவர அரசுக்கு எந்தவிதமான திட்டமும் இல்லை. இத்துறைகளில் கணக்கில் வராத பணம் புழங்குவதாக வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் எந்தவிதமான மதிப்பீடுகளையும் கண்டறியவில்லை.
மற்ற துறைகளைப் போல இத்துறைகளில் செயல்படும் ஏதேனும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்தால் அவர்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பும். அதன்பிறகு அவர்களின் வருவாய், தொழில் குறித்த ஆய்வுகள் மற்றும் சோதனைகள் நடத்தப்பட்டு வருமான வரி ஏய்ப்புத் தடுப்பு சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இப்போது இத்துறைகளுக்கு மட்டும் தனியாக ஒழுங்குமுறை விதிகள் வகுக்கும் திட்டமில்லை” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக