புதன், 4 ஜூலை, 2018

லண்டன் பங்குசந்தையில் இருந்து வேதாந்தா குழுமம் நீக்கம்

தொழிலாளர் கட்சி கோரிக்கை - லண்டன் பங்குசந்தையில் இருந்து வேதாந்தா குழுமம் நீக்கம் மாலைமலர் :பிரிட்டனின் தொழிலாளர் கட்சி கோரிக்கையை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரின் வேதாந்தா குழுமம் லண்டன் பங்கு வர்த்தக சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. #Sterlite #Vedanta #LondonStockExchange லண்டன்: தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கிடையே, லண்டனில் உள்ள அனில் அகர்வாலின் வீட்டு முன்னர் அங்குள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
அந்நாட்டின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியி வேதாந்தா நிறுவனத்தை நீக்க வேண்டும் என லண்டன் பங்குச்சந்தைக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இந்நிலையில், வேதாந்தா குழுமம் லண்டன் பங்குச்சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதே, நேரத்தில் அந்நிறுவனத்தின் பங்குகளை வோல்கன் டிரஸ்ட் வாங்குவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக