வெள்ளி, 27 ஜூலை, 2018

அழகிரி கலைஞரை பார்க்க மதுரையில் இருந்து புறப்பட்டார்

tamil.oneindia.com =shyamsundar: " தந்தை கருணாநிதியை பார்க்க மதுரையிலிருந்து சென்னை பறக்கிறார் அழகிரி சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக, அவரது மகன் அழகிரி மதுரையில் இருந்து இன்று சென்னை வர இருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அவர் இப்போது வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க பல்வேறு தலைவர்கள், நேற்று இரவோடு இரவாக அவரது வீட்டிற்கு வந்தார்கள். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நேற்று கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தனர். அதேபோல் நடிகர் கமல்ஹாசன், விசிக தலைவர் திருமாவளவன் , நடிகர் சரத்குமார், ஆகியோரும் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தனர். இந்த நிலையில் இன்று அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க அவரது மகன், அழகிரி சென்னை வருகிறார். மதுரையில் இருந்து அவர் சென்னை வருகிறார்.விமானம் மூலம் அவர் இன்னும் சில நிமிடத்தில் சென்னனை வர இருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக