புதன், 11 ஜூலை, 2018

லதா ரஜினி காந்த் கடன் மோசடி வழக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

விசாரணை,ரஜினி மனைவி,லதா ரஜினிகாந்த்,சுப்ரீம் கோர்ட், உச்ச நீதிமன்றம்,உத்தரவுதினமலர் : புதுடில்லி : ரஜினிகாந்த் நடித்த, கோச்சடையான் படத் தயாரிப்புக்காக வாங்கிய கடனை திருப்பி தராமல் மோசடி செய்த வழக்கில், விசாரணையை சந்திக்கும்படி, லதா ரஜினிகாந்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2014ல், 'மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் சார்பில், கோச்சடையான் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
இதற்கு, 'ஆட் - பீரோ' விளம்பர நிறுவனத்திடம் வாங்கிய, 6.2 கோடி ரூபாய் கடனுக்கு, ரஜினியின் மனைவி லதா பொறுப்பேற்றிருந்தார். போலீசில் புகார் :கடன் தொகையை திருப்பி தராமல் மோசடி செய்ததாக, லதாவுக்கு எதிராக, கடன் வழங்கிய நிறுவனம், கர்நாடகா மாநிலம், பெங்களூரு போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில், விளம்பர நிறுவனம் தொடர்ந்த வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


இதையடுத்து, விளம்பர நிறுவனம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அறிக்கை தாக்கல் :

அப்போது, 'லதா மீதான வழக்கை, போலீசார் மீண்டும் விசாரித்து, விசாரணை நீதிமன்றத்தில்  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

மேலும், 'இந்த வழக்கு விசாரணைக்குரியது. விசாரணையின்போது, நீங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபியுங்கள். நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். 'விசாரணை நீதிமன்றத்தில், ஜாமின் கோரி விண்ணப்பிக்கலாம்' என, லதாவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக