செவ்வாய், 31 ஜூலை, 2018

கலைஞர் தேறிவருகிறார் ..இன்னும் சிலநாட்கள் மருத்துவமனையில்.இருப்பார்!

ராகுல் காந்தி : “கருணாநிதி தைரியமானவர் நலமாக இருக்கிறார். அவர் நலமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது
மாலைமலர் :திமுக தலைவர் கருணாநிதி நன்றாக தேறி வருகிறார் என்றும் மேலும் சில நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது எனவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 27-ம் தேதி நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்த 5 ஆவது அறிக்கையை காவேரி மருத்துவனை இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது. மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும். 29-ம் தேதியில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பின்னர் தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது.< அவரது உடல்நிலை படிப்படியாக இயல்புநிலைக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக