செவ்வாய், 10 ஜூலை, 2018

கொரிய மொழி வரி வடிவத்தை உருவாக்கிய தமிழ் அரசி ... ஒரு பௌத்தர்.....

Gowthama Sanna : கொரியவின் தமிழ்ராணி..
கொரியாவின் மொழி வரிவடிவத்தை உருவாக்கியவர் ஒரு இந்தியப் பெண் என்பது கொரியாவில் வழங்கும் ஒரு தொண்மம். அந்தப் பெண் அயோத்தியில் பிறந்து கொரியாவிற்கு சென்றவர் என்று வடநாட்டு பார்ப்பனர்கள் கதைகட்டி அளந்து வந்தனர். இன்றைய பாஜக அரசும் அதற்கு நிறைய மெனக்கெட்டது என்பதுத் தனிக்கதை.
ஆனால் அந்தக் கொரியராணி ஒரு தமிழ்ப்பெண் என்பதை பேராசிரியர் நா.கண்ணன் கண்டிறிந்ததின் விளைவே இந்நூல். ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
அந்த கொரிய ராணி தமிழ்ப்பெண் மட்டுமல்ல, அவர் ஒரு பௌத்த பெண் என்பது எனது கருதுகோள். அதற்கான தர்க்கச் சான்றுகளை அந்நூலுக்கு எழுதிய மதிப்புரையில் விவரித்திருக்கிறேன். முழுமையான மதிப்புரை நூலில் காணலாம். மாற்று ஏற்பாடாக கீற்று இணையத்திலும் காணலாம்.
பேராசிரியர் நா கண்ணன் எழுதிய கொரியாவின் தமிழ்ராணி எனும் புத்தகத்திற்கு நான் எழுதிய மதிப்புரையின் ஒரு பகுதியை நேற்றைய தீக்கதிர் (09.06.2018) வெளியிட்டுள்ளது.

பேராசிரியர் நா.கண்ணன் உலகின் முன்னணி சுற்றுசூழல் விஞ்ஞானிகளுள் ஒருவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
அன்புடன்
சன்னா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக