ஞாயிறு, 29 ஜூலை, 2018

கலைஞரின் ரத்த அழுத்த அளவு 94/30, போராடும் மருத்துவர்கள்!

மின்னம்பலம்:  காவேரி மருத்துவமனை வாசலில் தொண்டர்கள் குவிந்து
கிடக்க, அனைவரின் எண்ணமும் திமுக தலைவர் கருணாநிதி குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. ஆனால் இன்று மாலை 7 மணியில் இருந்து கருணாநிதிக்கு குறைய ஆரம்பித்த ரத்த அழுத்தம் தொடர்ந்து இறங்குமுகமாகவே இருக்கிறது. பொதுவாக மனித உடலில் ரத்த அழுத்தம் 120/80 என்று இருக்க வேண்டும். அதாவது உயர் ரத்த அழுத்தம் 120, குறைந்த அழுத்தம் 80 என்று இருக்க வேண்டும். ஆனால் இன்று மாலை 7.30 வாக்கில் கருணாநிதியின் ரத்த அழுத்தம் 94/30 என்னும் அளவுக்கு போய்விட்டது என்கிறார்கள் காவேரி மருத்துவமனை வட்டாரத்தினர். இதில் குறைந்த ரத்த அழுத்தத்தை 30 ல் இருந்து உயர்த்துவதற்கு மருத்துவர்கள் கடுமையாகப் போராடி வருகிறார்கள். ஆனால் அதற்காக செலுத்தப்படும் மருந்துகளை கருணாநிதியின் உடல் நிலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே மருத்துவர்களின் பெரும் கவலையாக இருக்கிறது. மருத்துவர்கள் தொடர்ந்து போராட, குடும்பத்தினர் கவலையில் இருக்க தொண்டர்கள் கொட்டும் மழையிலும் காவேரி மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக