சனி, 21 ஜூலை, 2018

அழகிரி அரசியலுக்கு .... 6 மாதங்களுக்கு பின்பு அறிவிப்பு! பேருந்தை தவறவிட்டு விட்டார்?

விகடன் : திரு மு,க, அழகிரி கடந்த நான்கு வருடங்களாக  தி.மு.க-விலிருந்து
நீக்கப்பட்டிருந்தாலும், தி.மு.க-வுக்கு தொடர்பாக  தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார்.
அப்படி அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் தி.மு.க-வில் புகைச்சலைக் கிளப்பும். அவ்வப்போது கட்சியையும், ஸ்டாலினையும் மறைமுகமாகச் சாடிவருகிறார். அதற்கு உதாரணம்தான், சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற பி.எம். மன்னன் வீட்டு திருமண விழாவில் பேசியது. ``இப்பொழுது தி.மு.க-வில் இருப்பவர்கள் எல்லோரும் பதவிக்காக இருப்பவர்கள்" என்று கூறி அதிரவைத்தார்.
இதை, தி.மு.க-வினர் மட்டுமல்லாமல் மற்ற கட்சியினரும் அதிர்ச்சியாகப் பார்த்தார்கள். இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையம் வந்த அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவீர்களா என அழகிரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ``ஆறு மாசம் வெயிட் பண்ணுங்க, அரசியல்குறித்து அறிவிக்கிறேன்" எனக் கூறினார். ஆனால், மற்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக