வெள்ளி, 20 ஜூலை, 2018

செய்யாதுரை .. சிக்கிய சிடி'யில், 42 பேரின் பேச்சுகள் உள்ளனன.. கூவத்தூர் ரகசியங்கள் உள்பட ..

மாலைமலர் : "செய்யாதுரை,ரகசிய சிடி, அரசியல் கட்சினர், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை, வருமான வரித்துறை சோதனை, சிடி விவகாரம், அரசியல் கட்சிகள், சென்னை : நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய பிரமுகர்களின் உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ள 'சிடி' சிக்கியுள்ளது.
இது தொடர்பாக, வருமான வரித்துறை தரப்பில், தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், 'சிடி' விவகாரம் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுர்களுக்கு கசிந்துள்ளது. இதனால் பலர் கலக்கத்தில் உள்ளனர்.
ஏனெனில், 'சிடி'யில், 42 பேரின் உடையாடல்கள் பதிவாகி உள்ளன. ஜெ., மறைந்த பின், சசிகலா முதல்வராவதற்காக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், கூவத்துார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
அப்போது, சசிகலாவிற்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.,க்களுக்கு, கோடிக்கணக்கில் ரூபாய் வழங்கப்பட்டதாக, புகார் எழுந்தது. எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்குவதற்காக, செய்யாத்துரையிடம், பணம் கொண்டு வரும்படி முக்கிய பிரமுகர்கள் பேசியதை அவர் பதிவு செய்து வைத்துள்ளார்.


அதேபோல் அதிகாரத்தில் இருப்போர் பலர் அவரிடம் பண விவகாரம் குறித்து பேசியதை பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவுகள் அனைத்தையும் 'சிடி'யாக்கி, பாதுகாப்பாக வைத்திருந்தார். அந்த, 'சிடி'தான் தற்போது வருமான வரி அதிகாரிகளிடம் சிக்கி உள்ளது. அதில் அ.தி.மு.க., பிரமுகர்கள் மட்டுமின்றி, மாற்று கட்சியினர் பேசிய தகவல்களின் பதிவும் உள்ளதாம்.

இது தொடர்பான தகவல்கள் வெளியானால், பல தலைகள் உருளக்கூடிய வாய்ப்பு உள்ளது. இது செய்யாதுரையுடன் தொடர்பில் இருக்கும், அரசியல் புள்ளிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக