புதன், 18 ஜூலை, 2018

அயனாவரம் சிறுமி வன்கொடுமை - 40-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு? போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி

தந்திடிவி : சென்னையில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 40-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருக்கும் அதிர்ச்சி தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது சென்னையில் 12 வயது சிறுமியை கடந்த  ஏழு மாத காலமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த 17 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மேலும்  23 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி, விசாரணையின் போது ஒவ்வொரு நபரையும், அவரது< பெயரை சொல்லி அடையாளம் காட்டியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாகவே  தனியார் குடியிருப்பு வளாகத்தில் பாதுகாப்பு சேவை வழங்கிய நிறுவனத்தின் தலைமை அதிகாரியிடம் போலீசார் தீவிர விசாரணை நடந்தி உள்ளனர்.& இந்த விசாரணையின்  சிறுமி குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களும்&n போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டதாக  கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட கைது நடவடிக்கைகளை போலீஸார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக