ஞாயிறு, 29 ஜூலை, 2018

அகதி முகாமும் திமுகவும் ,,, அகதிகளுக்கு 20 மெடிக்கல் சீட் 20 எஞ்சினிரிங் சீட் அறிவித்தவர் கலைஞர்.

கணன் சுவாமி : இங்கு பத்மநாபா கொலையால் திமுக ஆட்சியை இழந்ததை
குறிப்பிடவில்லை அதை தொடர்ந்து ராஜீவ் கொலையையும் அதன்பிறகான திமுகவின் வீழ்ச்சியையும் கண்ணால் கண்டவன்.
கலைஞர் எம்மாம் பெருமனிதன் 80க்கும் அதிகமான மீன்பிடி படகுகளை வாராவாரம் அனுப்பி அகதிகளை இலவசமாக கொண்டுவந்து சேர்த்தது திமுகவே.
அப்படி ஒரு படகில் நானும் இலவசமாக அகதியாய் வந்து பதினைந்து வருடம் அகதிமுகாமில் வளர்ந்தவன். அப்போ அகதிக்கு 57 பைசாவுக்கு அரிசியை அறிவித்தவர் கலைஞர். அந்த அரிசியை இன்றும் லட்சம் இலங்கை அகதிமக்கள் வாங்கிட்டு தான் இருக்கிறார்கள்.
இரண்டு லட்சம் பேர் அகதியாக இருந்த பொழுது 20 மெடிக்கல் சீட் 20 எஞ்சினிரிங் சீட் அறிவித்தவர் கலைஞர்.
ஜெயலலிதாம்மா காலம் அகதி முகாம் ஜெயிலாக மாறும் கலைஞர் காலத்தில் ஒரு போலீஸ்காரன் கூட இருக்கமாட்டான்
அகதிகள் கடற்கரையோரங்களில் மீன்பிடித் தொழிலுக்கு செல்வர் ஏதோ அவனவன் அவனவன் பாடு பார்ப்பான் அதெல்லாம் ஒரு காலம் இப்போ நெனைச்சுக்கூட பார்க்க முடியாது! என்னவோ போங்க கலைஞர் காலத்தில் நான் மிகவும் சுதந்திரமான அகதியாய் இருந்தேன்.
அவர் எனக்கு தன்னாலான எல்லாவற்றையும் கொடுத்து கெளரவித்தார் எங்க ஊராளுங்களில் சிலர் மரியாதை தெரியாத பயலுக அவரை எழுந்தமானாத்துக்கு தூற்றுவார்கள்.

அவர்கள் புத்தி அவ்வளவு தான் தலைவர் கலைஞரை பற்றி கேட்கணும்னா பழைய அரசியல்வாதி தந்தை செல்வா அவர்களின் மகன் சந்திரகாசனைத்தான் கேட்கணும் இன்றுவரை மிக நெருக்கமாக இருப்பார்.
அந்த இரண்டு மணி நேர உண்ணாவிரதத்தை முடிக்க வைத்ததே சந்திரகாசன் தான். தலைவர் அந்த முடிவில் சொன்னது “ தந்தை செல்வாவின் மைந்தன் போர் முடிந்தது என்று சொல்கிறார் நான் அவரை நம்புகிறேன் போர் முடிந்த பின்னர் இந்த உண்ணாவிரதத்தைதொடர்வதில் அர்த்தமில்லை” என்றார்.
Picture : Tamil Eelam Supporters Organization (TESO) organised by DMK was held on May 4, 1985 ..The LTTE’s decision to send a low level representation, Lawrence Thilakar to TESO was attributed to Prabhakaran’s veneration of MGR – Karunanidhi’s main electoral opponent.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக