ஞாயிறு, 22 ஜூலை, 2018

இதுவரை 1,800 வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி உள்ளோம் ,, பாஜகவின் சமூக ஊடகப் பிரிவின் இணைத் தலைவரான நீல்காந்த் பக்ஷி

1,800 வாட்ஸ் அப் குழுக்களில் அமித் ஷாமின்னம்பலம்:   டெல்லி பாஜக ஒரே நாளில் 1,800 வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கியுள்ளது. இதில் அனைத்துக் குழுக்களிலும் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா இணைக்கப்பட்டிருக்கிறார். 'நேரடித் தகவல்' வழங்குவதற்காகவும், போலி செய்திகளைத் தடுப்பதற்காகவும் ( போலி செய்திகளை உருவாக்குவதற்கும்) இந்த வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பாஜக குறித்து தவறான தகவல் பரவுவதைத் தடுப்பதற்காகவும் மற்றும் ஒவ்வொருவருக்கும் ‘நேரடி தகவல்’ வழங்குவதற்காகக் கட்சியின் டெல்லி பிரிவு தலைவர்கள் மண்டல அளவில் சமூக வலைதளங்களில் பணியாற்றுவதற்குப் பணியாளர்களை நியமித்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக வாட்ஸ் ஆப் குழுக்கள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து டெல்லி பாஜகவின் சமூக ஊடகப் பிரிவின் இணைத் தலைவரான நீல்காந்த் பக்ஷி கூறுகையில் “நாங்கள் கட்சியின் அனைத்து அலுவலர்களையும், ஊழியர்களையும் சமூக வலைதளங்களில் இணைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

இதுவரை 1,800 வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கியிருக்கிறோம். இன்னும் இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். போலி செய்திகளைத் தடுப்பதற்கும், நேரடி தகவலை வழங்குவதற்குமே இந்த நடவடிக்கை” என்றார்.
1,800 வாட்ஸ் அப் குழுவிலும் அமித் ஷா உறுப்பினராக உள்ளார். சில குழுவில் அட்மீனாகவும் இருக்கிறார். இவற்றில் மாநிலத் தலைவர்களும் செயலாளர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.
பாஜகவினர் சமூக வலைதளங்களில் நிறைய பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள் என்றும், வரலாறு குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையிலேயே இந்த நடவடிக்கையை பாஜக மேற்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக