திங்கள், 23 ஜூலை, 2018

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு!

Lakshmi Priya - ONEINDIA TAMIL சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணையை 3-ஆவது நீதிபதி சத்யநாராயணா நடத்தினார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளையும் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. 
முதலில் டிடிவி தினகரன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். 
இதையடுத்து வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 
வழக்கில் தீர்ப்பு வழக்கில் தீர்ப்பு இந்த வழக்கில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் தீர்ப்பை வழங்கினர். இதில் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு 3-ஆவது நீதிபதியிடம் சென்றது.
உச்சநீதிமன்றம் உச்சநீதிமன்றம் 3-ஆவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து 17 எம்எல்ஏக்களும் (தங்கதமிழ்ச்செல்வன் தவிர்த்து) உச்சநீதிமன்றத்தை அணுகினர். உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்தக்கு மாற்றக் கோரியும் மூன்றாவது நீதிபதியை மாற்றக் கோரியும் வழக்கு தொடர்ந்தர். 
இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் 3-ஆவது நீதிபதி சத்யநாராயணாவை நியமனம் செய்தது. ஜூலை 4-இல் விசாரணை ஜூலை 4-இல் விசாரணை இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக சத்யநாராயணா இன்று விசாரணையை தொடங்கினார். முதலில் டிடிவி தினகரன் தரப்பு தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு இந்த விசாரணை நடைபெறுகிறது. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை விசாரணை இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக சத்யநாராயணா இன்று விசாரணையை நடத்தினார். இன்று முதல் 5 நாட்களுக்கு இந்த விசாரணை நடைபெறுகிறது. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தரப்பில் இன்று வாதம் நடைபெற்றது. சபாநாயகர் முடிவு ஒருதலைப்பட்சமானது என வாதம் நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக