ஞாயிறு, 8 ஜூலை, 2018

கரிந்தண்டன் திரைப்படம் 1700 களில் படுகொலைசெய்யப்பட்ட..

கேரள பழங்குடி மக்கள் ....  பெண்கள் அனைவரும் மேலாடையின்றியே காணப்பட்டார்கள்..! பலர் கீழே லுங்கியை அணிந்திருந்தனர், வயதான பெண்மணிகள் மேலாடை அணியாமலும், இளசுகள் மேலே ஒரு டவலை போர்த்திக்கொண்டும், சிலர் ரவிக்கையை மட்டும் அணிந்திருந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது...! அதில் பலபேருக்கு கல்வியறி இல்லை என்பதை அவர்களுடன் பேசுவதில் அறிந்துக்கொண்டேன்..! நூறுசதம் கல்வியறிவு கொண்ட மாநிலம் என்ற அளவீடு எதைக்கொண்டு அளக்கப்படுகிறதென்றே புலப்படலை..! இந்த மக்களை மக்களாக ஏற்கப்பட்டு அந்த புள்ளிவிபர கணக்கீட்டின் படி அளக்கவில்லையா என்ற ஐயமே எனக்கு எழுந்தது..!
Savitha Munuswamy : கேரளாவில் பழங்குடி சமுகத்திலிருந்து திரைத்துறையில்
ஒரு பெண் படைப்பாளி கரிந்தண்டன் என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குனராக பரிணமித்துள்ளார்..!
இத்திரைப்படம் 1700 களில் படுகொலைசெய்யப்பட்ட கரிந்தண்டன் பற்றி வரவிருக்கிரது..! நூறு சதம் கல்வியில் முதல் மாநிலம் என்று கேரளா போற்றப்படுகிறது..!
ஆனால் கடந்த 2013 ஆம் ஆண்டு கேரளாவில் '' அகில கேரளா மாவிலன் சமாஜ் ' -- என்ற பழங்குடி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றிற்கு பேச சென்றிருந்தேன்..! இதில் Ambedkarite party of India வின் நிறுவனர் திரு விஜய் மாங்கர் அவர்களும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்..!
அங்கு கேரள பழங்குடி மக்கள் வெகுவாக வந்திருந்தனர் , அதில் பெண்கள் அனைவரும் மேலாடையின்றியே காணப்பட்டார்கள்..! பலர் கீழே லுங்கியை அணிந்திருந்தனர், வயதான பெண்மணிகள் மேலாடை அணியாமலும், இளசுகள் மேலே ஒரு டவலை போர்த்திக்கொண்டும், சிலர் ரவிக்கையை மட்டும் அணிந்திருந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது...!
அதில் பலபேருக்கு கல்வியறி இல்லை என்பதை அவர்களுடன் பேசுவதில் அறிந்துக்கொண்டேன்..! நூறுசதம் கல்வியறிவு கொண்ட மாநிலம் என்ற அளவீடு எதைக்கொண்டு அளக்கப்படுகிறதென்றே புலப்படலை..!
இந்த மக்களை மக்களாக ஏற்கப்பட்டு அந்த புள்ளிவிபர கணக்கீட்டின் படி அளக்கவில்லையா என்ற ஐயமே எனக்கு எழுந்தது..! இங்கிருந்துக்கொண்டு கேரளாவை நாம் மெச்சிக்கொள்கிறோம்..! அங்கிருக்கும் ஒடுக்கப்பட்ட, பழங்குடி மக்களிடம் கேட்கும்போது பதில் வேறுமாதிரியாக வருகிறது..!
பிறகு அவர்களின் பாரம்பரிய நடனங்களை இசைக்கருவிகளை இசைத்தவண்ணம் உடன் ஆட அழைத்தனர், நான் தயங்கவே , எங்களை அழைத்த அந்த மாவிலன் சமாஜின் தலைவர் மேடம் நீங்க வெட்கப்படுவதாக அவர்கள் நினைக்கமாட்டார்கள் அவர்களோடு ஒன்றிவர விருப்பமில்லாதவர், என்று புறக்கணித்து விடுவார்கள் என்றார் , இதென்னடா வம்பாபோச்சி என்று உடனே நான் அவர்களோடு கைகோர்த்து குத்து குத்து என்று பெரிய குத்து டான்சையே நடத்திவிட்டேன்..எல்லோரும் எனது நடனத்தைப்பார்த்து மிகவும் மகிழ்ந்துபோனார்கள்..!
பிறகு மலைகளிலிந்து அவர்கள் கொண்டுவந்த தேனில் பலாப்பழத்தை குழப்பி , துவட்டி கொடுத்தார்கள் ப்பா..! இதுவரை என்வாழ்வில் அப்படி ஒரு சுவையை நான் கண்டதில்லை. தேன் என்றால் என்ன?, பழங்கள் உண்மையான தன்மையை எப்படி இருக்கும்.? என்பதை அங்கு வசிக்கும் பழங்குடி மக்கள் எங்களுக்கு பரிமாறிய உணவின் வழியே உணர்ந்தேன்..! என்வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகள் அவை..!
எனக்கு தெரிந்து தமிழகத்திலுள்ள பழங்குடி இருளர் மக்கள் கூட ஓரளவேனும் நாகரீக வாழ்வை நோக்கி உடை உடுத்தி , சாமானிய ஏழைகளைப்போல் இருக்கிறார்கள்..! ஆனால் கேரளாவில் இன்னும் கல்வியறிவின்றி, நாகரீக வாழ்வை நோக்கி நகராத அந்த ஆயிரக்கணக்காண பழங்குடி மக்களை நான் சந்தித்தபோது அவர்கள் இன்றளவும் எவ்வளவு பின்தங்கி வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படாமல் இருளில் வாழ்ந்துக்கொண்டிருக்குறார்கள் என்பதை அறியந்தேன் ..!
வியப்பு என்னவென்றால் அவ்வளவு வறுமைக்கு மத்தியில் நொறுங்கி விடாமல், இயற்கையோடு இரண்டறக்கலந்து , பண் இசைத்து நடனமாடி ஒன்றி துன்பத்தில் துவண்டுவிடாமல் மகிழ்ச்சியாய் வாழும் கலை எமக்கே உரிய பண்பு..!
அப்பழங்குடி சமூகத்திலிருந்து திரைத்துறைக்கு வரும் நமது சகோதரி லீலா அவர்களை உளமாற வாழ்த்தி வரவேற்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக