வியாழன், 14 ஜூன், 2018

காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புஹாரி சுட்டுக்கொலை.. 'Rising Kashmir' editor Shujaat Bukhari shot dead


BBC :காஷ்மீரில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால்
சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.'ரைசிங் காஷ்மீர்' இதழின் ஆசிரியர் சுஜாத் புஹாரி மற்றும் அவரது அலுவலக பாதுகாவலர் ஒருவர், ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் இன்று மாலை அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிபிசியிடம் பேசிய ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் செய்தித்தொடர்பாளர் வஹீத் பாரா, அலுவலகம் கொண்டுசெல்லப்படும் வழியில் புஹாரி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
"ஈத் பண்டிகைக்கு முந்தைய நாள் தீவிரவாதம் ஒரு இழிவான நிலையை அடைந்துள்ளது," என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் உமர் அப்துல்லா, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக