வெள்ளி, 29 ஜூன், 2018

சென்னை உயர்நீதிமன்றம் அவாள் மற்றும் தெலுங்கர்கள் கட்டுபாட்டில் இருக்கிறது

Durai Arun : சென்னை உயர் நீதிமன்றத்தில் CISF (Central industrial Security Force) மத்திய தொழிற்பாதுகாப்பு படை பாதுகாப்பு பணி ஏற்ற பிறகு உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி காக்கப்பட வேண்டும்! 
கடைபிடிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை முடக்கப்பட்டு பல்வேறு மாநிலத்த்தை சார்ந்தவர்களும் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள், 
சமூக நீதிக்கான போராட்டங்கள் ஓய்ந்துவிட்டது!!! 
சி.எஸ்.எப் பாதுகாப்பை மீறி வழக்கு இல்லாத வெளியாட்கள் யாரும் நீதிமன்றத்தின் உள்ளே நுழைவது என்பது சாத்தியம் அன்று!!!!! 
சி.எஸ்.எப் பாதுகாப்பு வளையத்தில் உயர் நீதிமன்றம் வருவதால் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் இயங்கிய ஆனந்த பவன் எனும் உணவகத்தை வெளியேற்றினார்கள் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை ஆனால் இரண்டு இடங்களில் தேநீர் கடை நடத்துவதற்கு ஆந்திராவை சார்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது ?!!!!! 
இரண்டு வருடங்களாக ஆந்திராவை சார்ந்தவர்கள் கடை நடத்தி வருகிறார்கள் ..!!!!!!!

தமிழ் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் தேநீர் கடை நடத்துவதற்கு கூட ஆந்திராவை சார்ந்தவர்களுக்கும் , ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கும் இடமளிக்கப்படுவதின் நோக்கம் உயர் நீதிமன்ற நிர்வாகத்திற்கே வெளிச்சம்!!!
ஒரு தேநீர் கடை நடத்துவதற்கு கூட தமிழ் நாட்டில் ஆட்கள் இல்லையாம்!!!!!!! யாம் ஒன்றும் அறியேன் !!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக