ஞாயிறு, 10 ஜூன், 2018

உச்சா நடிகருக்கு ஒல்லி மருமகனே ஆப்பு வைத்தாரா? தூத்துக்குடிக்கு துரத்தி சாத்துகுடியாக்கியது யார்?

சென்னை: ஒல்லி நடிகர் தனது மாமனாருக்கே ஆப்பு வைத்துவிட்டார் என்று
தான் பேச்சு கிளம்பியுள்ளது.
ஒல்லி நடிகர் தனது மாமனாரான உச்ச நடிகரின் படத்தை தயாரித்தார். அவராக ஒன்றும் தயாரிக்கவில்லை. மாமனார் கூப்பிட்டுக் கேட்டதால் தயாரித்தார். இந்த தகவலை மாமனார் தான் தெரிவித்தார். மாமனாரின் படத்திற்கு நல்ல விமர்சனம் வந்தும் வசூல் சரியாக இல்லை.
 இதே இயக்குனருடன் சேர்ந்து உச்ச நடிகர் பணியாற்றிய முந்தைய படத்திற்கு அதன் தயாரிப்பாளர் தாம் தூம் என்று விளம்பரம் செய்தார். மனுஷன் என்னமா விளம்பரம் செய்கிறார் என்று அனைவரும் வியந்தார்கள். ஆனால் உச்ச நடிகரின் தற்போதைய படத்திற்கு சரியாக விளம்பரம் செய்யவில்லை.
 படத்தை விளம்பரம் செய்வதில் ஒல்லி கில்லி என்பது அனைவருக்கும் தெரியும். அவரின் படங்களை அவர் விளம்பரம் செய்யும் விதமே தனி. விளம்பரம் செய்வது எப்படி என்று ஒல்லியிடம் கற்க வேண்டும் என்று கூறும் அளவுக்கு மனிதர் வேலை செய்வார்.
  விளம்பரம் செய்யும் வித்தைகள் அறிந்திருக்கும் ஒல்லி தனது மாமனாரின் படத்திற்கு ஏனோ சரியாக விளம்பரம் செய்யவில்லை. மாமனாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் உச்ச நடிகரோ வேண்டாம் என்று கூறிவிட்டார்.

தனது ஆசையை நிறைவேற்றாத மாமனார் மீதான கடுப்பில் தான் ஒல்லி இந்த படத்தை விளம்பரம் செய்யாமல் இருந்துவிட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

உச்ச நடிகரோ தனது படத்தை விளம்பரம் செய்யவே தூத்துக்குடிக்கு சென்றதாக பேச்சு கிளம்பியது. ஆனால் அவர் தூத்துக்குடியில் பேசிய பேச்சு மக்களை அதிருப்தி அடைய வைத்து படத்திற்கு நெகட்டிவ் விளம்பரமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 பட ரிலீஸுக்கு முன்பு இமேஜை மோசமாக டேமேஜ் செய்து கொண்ட தலைவர் உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா தலைவருக்கு இரண்டு பக்கமும் இடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக