வியாழன், 7 ஜூன், 2018

நீட் தோல்வி மற்றுமொரு தற்கொலை -திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை!

One More TN girl commits suicide after failing to qualify NEET live updates tamilthehindu :திருச்சி: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீட் எனும் நாசகார தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து கொண்டிருந்தது. நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.< இந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த செஞ்சி பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் திருச்சி மாணவி சுபஸ்ரீ நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ் டூ தேர்வில் 907 மதிப்பெண்கள் எடுத்திருந்த சுபஸ்ரீ நீட் தேர்வில் தோல்வி அடைந்தார். இது குறித்து திருச்சி நெ.1 டோல்கேட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக