வெள்ளி, 8 ஜூன், 2018

இல்லுமினாட்டி புகழ் பாரிசாலன் கைது .. நாம் தமிழர் கட்சியினர் ,,


சென்னை: சமூக வலைதளங்களில் அரசியல் தொடர்பான விமர்சனங்கள் வீடியோவாக வெளியிடுபவரும் இல்லுமினாட்டி குறித்து அதிகம் பேசுபவருமான பாரிசாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூரில் உள்ள பஜாஜ் கம்பெனியில் தனது பைக்கை சர்வீஸ்க்காக விட்டபோது ஏற்பட்ட தகராறில் அந்நிறுவனத்தினர் பாரிசாலனை தாக்கினர். இதில் வாயில் ரத்தம் சொட்ட சொட்ட சமூக வலைதளங்களில் தன்னை அடித்தது தெலுங்கர்கள் என லைவ் வீடியோ போட்டார் பாரிசாலன்.
நாம் தமிழர் கட்சியின் தீவிர ஆதரவாளரான பாரிசாலனுக்கு நீதிகேட்டு அக்கட்சியினர் பஜாஜ் கம்பெனியில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாரிசாலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாரிசாலன் கைது செய்யப்பட்டது குறித்தும் அவர் தாக்கப்பட்டது குறித்தும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலும் கேலியுமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக