செவ்வாய், 12 ஜூன், 2018

வடகொரியாவுடன் புதிய வரலாறை எழுதுவோம்- தென்கொரியா அதிபர் நம்பிக்கை

வடகொரியாவுடன் புதிய வரலாறை எழுதுவோம்- தென்கொரியா அதிபர் நம்பிக்கை
மாலைமலர் :கடந்தகால இருண்ட நாட்களை மறந்துவிட்டு வடகொரியாவுடன் புதிய வரலாறை எழுதப் போவதாக தென்கொரியா அதிபர் மூன் ஜே தெரிவித்துள்ளார். சியோல்:< சிங்கப்பூரில் இன்று அமெரிக்கா - வடகொரியா இடையில் கையொப்பமான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடந்தகால இருண்ட நாட்களை மறந்துவிட்டு வடகொரியாவுடன் புதிய வரலாறை எழுதப் போவதாக தென்கொரியா அதிபர் மூன் ஜே தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வடகொரியாவுடன் எப்போதும் இணைந்திருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, முன்னர் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்ற
எல்லையோர பன்மன்ஜோம் கிராமத்தில் இருநாடுகளின் ராணுவ உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வடகொரிய ராணுவத்தின் லெப்டினண்ட் ஜெனரல் அன் இக்-சான் தலைமையில் வடகொரியாவை சேர்ந்த 5 பேர் தென்கொரியாவுக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக