திங்கள், 11 ஜூன், 2018

சென்னையில் இருந்து விரட்டி துரத்தப்படும் சேரிவாழ் மக்கள் .. ஒடப்பர் உதையப்பராக வேண்டும் ..

Savitha Munuswamy : காலா திரைப்படம் நமது வாழ்வியலை திரையில் நம் கண் க்க தலித் மக்களுக்காய் நாம் போராட அணியமாகவேண்டும்..!
முன்னே ஓட விட்டு காட்டியது...ஆனால் அதில் கூறப்படும் ஒற்றுமையும், அதன் நீட்சியாக நிலம் எங்களது உரிமை என்று ஒற்றுமையோடு போராடும. அந்த போர்குணத்தை நீங்கள் உணர்ந்தவர்களெனில் சிங்காரச் சென்னைக்கு அசிங்கங்களாய்க் கருதி விரட்டியடிக்கப்படும் நம் சேரிவாழ் மக்களுக்காக நாம் குரல்கொடுத்து போராடுவோம் ..! சென்னைக்கு வெளியே அப்புறப்படுத்தப்பட்டு துரத்தப்படும் இம்மண்ணின் மைந்தர்களான , பூர்வீக மக்கள் , சென்னை உருவாக காரணமாய் இருந்த உழைக்கும் வர்
நமது முகநூல் சகோதரர் சரவணன் குறிப்பிடுவதைப்போல குன்னூர்ரோடு ஓட்டேரி, ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு, என்ற பெயரில் அப்பகுதியில் காலங்காலமாய் வசித்துவரும் சாலையோர மக்களை அப்புறப்படுத்தி அச்சாலையோர வீடுகளையும் அகற்றி வருகின்றனர்..! பெரும் பணக்காரன்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தைப் போக சொல்லுங்கள் பார்க்கலாம்..! போகாது...இளிச்சவாயன் கூவம் ஓரத்திலும், சுடுகாடு ஓரத்திலும் துரத்தப்பட்டு வாழ்பவன்தான்..இவனுங்களுக்கு..!
சென்னையின் சேரிவாழ் மக்களை சிங்காரச் சென்னை என்ற பெயரில் பல மைல் தூரத்தில் புறாகூண்டைப்போல வீட்டைக்கட்டி எந்தவித அடிப்படை வசதிகள் , போக்குவரத்து, கடைகள், பள்ளிகள், தொழில் வசதிகள் இல்லாத இடங்களில் அடுக்கிவைத்து அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதை தோழர் இசையரசு பல பதிவுகளில் குறிப்பிட்டு கதறி வருகிறார்..
அதுவும் இங்கு யார் காதுகளுக்கும் வீழ்ந்தபாடில்லை..!
நகர்புரத்து சேரிவாழ் தலித்துகளை சென்னையை விட்டு துரத்தும் அரசின் அயோக்கியத்தனத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தலித் இயக்கங்கள், கட்சிகள், சமுக செயல்பாட்டாளர்கள் களமிரங்கி இம்மக்களுக்காண பிரதிநிகளாக தங்களை உறுதிப்படுத்திடவும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதமும் அளித்திடல் வேண்டும்...! ஜெய்பீம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக