ஞாயிறு, 10 ஜூன், 2018

சிவசேனா : பிரணாப் முகர்ஜியை பாஜக பிரதமர் வேட்பாளராக்க ஆர் எஸ் எஸ் முயற்சி?

THE HINDU TAMIL : பாஜகவுடன் நீண்டநாளைய கூட்டாளியான சிவசேனா சமீபமாக பாஜகவை கடுமையாக விமர்சிக்கிறது.. ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு முன்னாள் குடியரசுத் தலைவரும் காங்கிரஸாருமான பிரணாப் முஜர்ஜியை அழைத்து அவரும் பங்கேற்றதற்கு சிவசேனா புதிய காரணங்களைக் கற்பித்துள்ளது.
2019 மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் பாஜகவின் கொள்கை நம்பிக்கை அறிவுரையாளரான ஆர்.எஸ்.எஸ். பிரணாப் முகர்ஜியை அதன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற ஐயம் எழுப்பியுள்ளது. இதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்கு திடீரென பிரணாப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது என்கிறார் சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத்.

“பாஜகவுக்கு தேவையான இடங்கல் கிடைக்காத சூழ்நிலையை ஊகிக்கும் ஆர்.எஸ்.எஸ். பிரணாப் முகர்ஜியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கத் தயாராகி வருவதாக நாங்கல் உணர்கிறோம். மேலும் 2019 தேர்தலில் பாஜக பெரிய அளவில் பெரும்பான்மையிலிருந்து பின்னடைவைக் காணும் நிலை உள்ளது, பாஜக குறைந்தது 110 இடங்களையாவது இழக்கும்” என்கிறார் மூத்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத்.
நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி பங்கேற்றதையடுத்து பல்வேறு சொல்லாடல்கள் அரசியல் களத்தில் எழுந்து வருகின்றன, இது ஆர்.எஸ்.எஸ்.இன் அரசியல் ஆயுதம் என்றெல்லாம் காங்கிரஸார் எதிர்க்கருத்து தெரிவித்தனர், பிரணாப் மகளும் காங்கிரஸ் கட்சியில் இருப்பவருமான ஷர்மிஷ்தா முகர்ஜி கூட பாஜகவின் கையில் விழும் செயல் இது என்று தந்தையை விமர்சித்தார்.
இந்நிலையில் சிவசேனா அதன் பத்திரிகையான சாம்னாவில் பிரணாப் முகர்ஜியை பிரதமர் வேட்பாளராக்கும் ஊகத்தை வெளியிட்டது.
இதற்குக் காரணமாக பிரணாப் குடியரசுத் தலைவராக இருந்த போது நீதித்துறை நெருக்கடி, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்ற பெரிய பிரச்சினைகளிலெல்லாம் பிரணாப் வாய்மூடி மவுனியாக இருந்தார் என்றும் சாம்னா எழுதியது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக