செவ்வாய், 19 ஜூன், 2018

நாய் செத்ததற்கெல்லாம் பிரதமர் பதில் கூற வேண்டுமா? கெளரி லங்கேஷ் கொலை பற்றி ஸ்ரீ ராம் சேனா கருத்து

Chinniah Kasi : நாய் செத்ததற்கெல்லாம் பிரதமர் பதில் கூற வேண்டுமா?
கவுரி லங்கேஷை இழிவுபடுத்திய ஸ்ரீராம் சேனா முத்தலீக்
(கொலைக் கும்பலின் தலைவனே இவன்தானே?)
பெங்களூரு, ஜூன் 18 -
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை பற்றி, பிரதமர் மோடி இப் போது வரை ஏன் பேச மறுக்கிறார்? என்று எல்லோரும் கேட்பதாகவும், ‘நாய் செத்ததற்கெல்லாமா பிரதமர் பதில் சொல்வார்’ என்று ஸ்ரீராம் சேனாதலைவர் பிரமோத் முத்தாலிக் திமிராகபேசியுள்ளார்.‘கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப் பட்ட விவகாரத்தில் இதுவரை பிரதமர் மோடி எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை; கவுரி லங்கேஷை சுட்டுக்கொலை செய்ததற்கு முகநூலில்பாராட்டுத் தெரிவிக்கும் பலர் மோடியின் ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர்’ என்று நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டி இருந்தார். இதேபோல காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், அறிவுஜீவிகளும், பத்திரிகையாளர்களும் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு, ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் பொதுக்கூட்டம் ஒன்றில் பதிலளித்துப் பேசியுள்ளார்.
அப்போது, ‘கர்நாடகத்தில் நாய் செத்தால்கூட பிரதமர் மோடிகருத்துச் சொல்ல வேண்டுமா?’ என்றுஎதிர்க்கேள்வி எழுப்பி, கவுரி லங்கேஷை மிக மோசமான முறையில்இழிவுபடுத்தியுள்ளார்.இது வீடியோவாகவும் வெளியாகியிருக்கும் நிலையில், முத்தாலிக்கின் பேச்சுக்கு நாடு முழுவதும் உள்ளபத்திரிகையாளர்களும் எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி கவுரி லங்கேஷின் படுகொலையை கண்டிக்கவில்லை. இப்போது அவரை இழிவுபடுத்தும் பேச்சையும் கண்டிக்காமல் தான் இருக்கப் போகிறாரா? என்று காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல பலரும் முத்தாலிக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், அவரது வீட்டின் முன்பாகவே, கடந்த2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம்தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப் பட்டார். இந்துத்துவ அமைப்புகளை விமர்சித்து, தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்ததாலேயே அவர் கொல்லப்பட் டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கேற்பவே, அண்மையில் கைதான பரசுராம் வாக்மோர், ஹிந்து மதத்தைக் காக்கவே லங்கேஷை சுட்டதாக வாக்குமூலம் அளித்தார். ஸ்ரீராம் சேனாவை சேர்ந்த இவர், முத்தாலிக்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் அண்மையில் வெளியாகின. இந்நிலையில்தான், கவுரி லங்கேஷை முத்தாலிக் மிக மோசமாக இழிவுபடுத்தியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக