வெள்ளி, 8 ஜூன், 2018

தினமலர் : இந்து கடவுள்களை காரணம் இன்றி எதிர்க்கும் 'காலா': ஏமாற்றப்பட்டாரா ரஜினி?

சென்னை: 'கபாலி' படத்திற்குப் பிறகு மீண்டும்
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'காலா', புதிதாக பல சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. படத்தைப் பார்த்த பலரும், இயக்குனர் ரஞ்சித் தேவையற்ற பல காட்சிகளை வேண்டுமென்றே திணித்திருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
கடவுள் எதிர்ப்பு: படத்தைப் பார்த்த பொதுவான ரசிகர்கள், படத்தில் தேவையே இல்லாமல் இந்து மதக் கடவுள்களை எதிர்க்கும் விதத்தில் குறியீடுகளாக பல காட்சிகளை ரஞ்சித் வைத்திருக்கிறார் என்று கோபத்தில் இருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பத்திலேயே தாராவி பகுதியில் உள்ள 'டோபிகானா'வை சில ஆட்கள் வந்து இடிக்க முயல்கிறார்கள். அவர்கள் அனைவரும் நெற்றியில் சிவப்பு பொட்டையும், கழுத்தில் காவி உடையையும் அணிந்திருக்கிறார்கள். அதற்குத் தலைமை தாங்கும் துணை வில்லன் சம்பத், கொல்லப்படும் போது, கடலில் விநாயகர் சிலைகளை அழுத்திக் கரைக்கிறார்கள். <>ராமர், கிருஷ்ணர்:
 அடுத்து, நானா படேகர் வீட்டைக் காட்டும் போதெல்லாம், அவர் இந்து மதத்தில் தீவிரப் பற்று கொண்டவர் என்பதைக் குறிக்கும் வகையில், பின்னணியில் கிருஷ்ணர் சிலை, அடுத்து ராமர் சிலை ஆகியவற்றை காட்டுகிறார்.
கிளைமாக்ஸ் காட்சியில், வில்லன் நானா படேகர் வீட்டில், ராமர் பூஜையுடன் ராமர் கதாகலாட்சேபம் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ராமர், ராவணனை வதம் செய்வது பற்றி பாடப்படுகிறது. அந்த சமயத்தில் ராமன் புகழையும், பெருமையையும் பற்றி சொல்வதை விட ராவணன் பெருமைகளை உரக்கச் சொல்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்திலிருந்தே, தாராவி சம்பந்தப்பட்ட காட்சிகளின் பின்னணியில் அம்பேத்கர் படத்திற்கும், புத்தர் படத்திற்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற தமிழக தலைவர்கள் யாருக்கும் முக்கியத்துவம் இல்லை.
ரஜினியின் முன்னாள் காதலியான ஹூமா குரேஷி கதாபாத்திரம் முஸ்லிம் கதாபாத்திரமாக படைக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பம் 70களில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டு வெளியேறியதாக காட்டப்படுகிறது.
;கடவுளுக்கு எதிராக வசனம்:
ஒரு காட்சியில், “என் நிலத்தைப் பறிப்பதுதான் உனது தர்மம், உன் கடவுளின் தர்மம் என்றால் அந்தக் கடவுளைக் கூட எதிர்ப்பேன்,” என ரஜினி வசனம் பேசுகிறார். இங்கு எதற்கு கடவுளை எதிர்ப்பேன் என்ற வசனத்தைத் திணிக்க வேண்டும் என்றும் தெரியவில்லை.
'தூய்மை இந்தியா' என்ற திட்டத்தை, 'தூய்மை மும்பை' என்றும், எச்.ஜாரா (எச்.ராஜா?) என்றும், படத்தில் வேண்டுமென்றே திணித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டுக் களத்தை மையமாக வைத்தால், இங்கு தேவையில்லாமல் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டும் என்ற பயத்தில் 'கபாலி'யில் மலேசியாவையும், 'காலா'வில் மும்பையையும் கதைக்களமாக ரஞ்சித் வைத்திருக்கிறார் என்கிறார்கள்.
'நாயகன்' படத்திலிருந்து, பல காட்சிகளை உருவி எடுத்துவிட்டு, 'கபாலி, சுறா, வியட்னாம் காலனி' என இதற்கு முன் வந்த பல தமிழ்ப் படங்களிலிருந்தும் காட்சிகளை சுட்டு, 'காலா' என்ற காப்பி படத்தை ரஞ்சித் கொடுத்திருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.>ரஜினிக்கு கேள்வி:</> 'ஆன்மீக அரசியல்' என்று பேசிய ரஜினி, ஆன்மிகத்தை எதிர்க்கும் ஒரு படத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.


தலித்துகளும் கோபம்:
இது குறித்து பேசிய மதுரையை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ரஜினி ரசிகர்கள் சிலர், ‛‛இப்படத்தில் தலித்துகளுக்கு ஆதரவான கருத்துகளை பதிவு செய்வதாக நினைத்துக்கொண்டு, இந்து நம்பிக்கைகளை புண்படுத்தி உள்ளார் ரஞ்சித். தலித்துகளில் பெரும்பாலானோர் இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்துள்ளவர்கள் என்பதை அவர் மறந்து விட்டார். இந்து கடவுள்களை எதிர்த்து காட்சி வைத்தால், அரசியலுக்கு வரும்போது, தலித் ஓட்டுகளை நீங்கள் பெறலாம் என ரஜினியையும் ரஞ்சித் ஏமாற்றி உள்ளார்'' என்றனர்.

அடுத்த சர்ச்சை:

இப்படத்தில் இந்து நம்பிக்கைகளுக்கு எதிராக ஏகப்பட்ட குறியீடுகளை வைத்ததன் மூலம், அடுத்த சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளார் ரஞ்சித்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக