ஞாயிறு, 3 ஜூன், 2018

இந்தியாவிலேயே முதல் முதலில் என்ற வரிகளுக்கு கலைஞர் எப்படி ... ?

வரலாறு அறிவோம் : இந்தியாவிலேயே முதல் முறையாக கலைஞர்
அவர்கள் செய்த சில சாதனை திட்டங்கள்.
விடுதலை நாளில் கோட்டையில் தேசியக் கொடியை மாநில ஆளுநர் ஏற்றி வைக்கும் வழக்கத்தை மாற்றி மாநில முதல்வர்களுக்கு அவ்வுரிமையை பெற்றுத் தந்தார்.குடிசை மாற்று வாரியம் அமைத்து குடிசைவாசிகளுக்காக அடுக்கு மாடி வீடுகள் அமைத்து அவர்களை குடியேற்றினார்.
■தாழ்த்தப்பட்டோருக்கும், மீனவர்களுக்கும் இலவச அடுக்குமாடி வீடுகளைக் கட்டித் தந்தார்.
■இந்தியாவிலேயே முதல் முதலாக போலீஸ் கமிஷன் அமைத்துக் காவல் துறையினரின் சீருடை, பணி, ஊதியம் ஆகியவற்றைச் சீர்திருத்தி அமைத்தார்.
■பணியாற்றும் பொழுது இறக்க நேரிடும் அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ. 10,000 (தற்போது ஒரு இலட்சம்) உதவித் தொகை வழங்கும் முறையைத் தொடங்கி வைத்தார்.
■தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வரதராசன் அவர்களை உயர்நீதிமன்ற நீதிபதியாக்கினார்.
பின்னர் அவர் உச்சநீதிமன்ற நீதியரசரும் ஆனார். உச்சநீதி மன்றத்தில் நீதியரசரான முதல் தாழ்த்தப்பட்டவர் அவரே.
■தனியார் பேருந்துகளை நாட்டுடமை ஆக்கி சேர, சோழ, பாண்டியன், பல்லவன்-திருவள்ளுவர் ஆகியோர பெயர்களால் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கினார்.
மாணவர்களுக்கு +2 வரை இலவசப் பேருந்துப் பயணச் சலுகை வழங்கினார்.
பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி முகாம் தொடங்கினார்.
■மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்து, அவர்களுக்கு இலவசமாக சைக்கிள் ரிக்ஷா வழங்கினார்.
■ஏழையர்க்குக் கண்ணொளி வழங்கும் திட்டம் செயல்படுத்தினார்.

■தொழுநோய் மற்றும் இரவலர்க்கு மறுவாழ்வு இல்லங்கள் அமைத்தார்.
■ஆதரவற்ற குழந்தைகளைக் காத்திடக் கருணை இல்லம் அமைத்தார்.
■தமிழ்நாட்டில் மே முதல் நாளைத் தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை என அறிவித்தார்.
■தமிழறிஞர்களின் பிள்ளைகளுக்கு பொறியியல், மருத்துவப் படிப்புகளில் 5 % தனி இட ஒதுக்கீடு வழங்கினார்.
■கல்வித் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புத் தேர்வுகளை (Compound system) நடைமுறைப்படுத்தினார்.
■விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார்.
■மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையாக தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கினார்.
■பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம் கொண்டு வந்தார்.
■மாநில சுயாட்சி குறித்து ஆரய்ந்திட ‘இராஜமன்னார் குழு அமைத்தார்.
■மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்காக 20% இட ஒதுக்கீடு அளித்தார்.
■கிழக்கு ஆசியாவிலேயே முதன்முதலாகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் ஏற்படுத்தினார்.
■தியாகி வ.உ. சிதம்பரனார் சிறையில் மெய்நோக இழுத்த செக்கினைத் தேடிக் கண்டுபிடிக்கச் செய்து அதை நினைவுச் சின்னமாக்கினார்.
■விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படுவது பேல் மொழிப்போர் தியாகிகளுக்கும் ஒய்வூதியம் வழங்கினார்.
■விடுதலைப் போராட்ட வீரர் இறந்துவிட்டால், அவருக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என ஆணையிட்டார்
■ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்ட ஒரு சிற்றூரைத் தேர்ந்தெடுத்து, அதில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைச் செயற்படுத்தினார்.
■சாதி, சமயப் பூசல்களை மறந்து தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாய் வாழ்ந்திட நாடெங்கும் சமத்துவபுரம் திறந்து அவற்றிற்க்குப் பெரியார் நினைவு சமத்துவபுரம் எனப் பெயிரிட்டார்.
■நாட்டு மக்களிடையே கூட்டுறவு, தற்சார்பு உணர்வுகளை வளர்த்திட நமக்கு நாமே திட்டம் கொண்டு வந்தார்.
■தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றி அதனைத் தில்லிக்கு அனுப்பினார்.
■பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலங்காக்கத் தனித்துறை (அமைச்சகம்) ஏற்படுத்தினார்.
■சமூக சீர்த்திருத்தத்திற்காக தனி அமைச்சகம் ஏற்கடுத்தினார்.
■இடைத்தரகர்களின் தலையீடு இன்றி உற்பத்தியாளரும், நுகர்வோரும் நேரடித் தொடர்பு கொள்ளும் வகையில் உழவர் சந்தைகள் தொடங்கினார்.
■கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு, பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் 5% தனி இட ஒதுக்கீடு வழங்கினார்.
■பட்டதாரிகள் இல்லாத குடும்பங்களிலிருந்து வரும் 100 மாணவ, மாணவியர்களுக்கு இலவச தொழிற் கல்வி வழங்கினார்.
■மெட்ராஸ் என்ற பெயரை ”சென்னை” என மாற்றினார்.
■உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு மகளிருக்கு இட ஒதுக்கீடு
■அரசு அலுவலர்கள், அரசின் நீறுவனங்கள், ஊராட்சி மன்றங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு செய்தார்.
■நகரங்களை குக்கிராமங்களுடன் இணைத்திட சிற்றுந்து (மினிபஸ்) திட்டம் கொண்டு வந்தார்.
■தில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் (1969) ‘வங்கிகளை நாட்டுடமை’ ஆக்கிட யோசனை கூறினார். (இதன் அடிப்படையில் தான் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் 14 தனியார் வங்கிகளை நாட்டுடமை ஆக்கினார்.
■பன்னாட்டு மூலதனத்தை தமிழ்நாட்டுக்குக் கவர்ந்திட இந்தியாவிலேயே முதன்முதலாக டைடல் பூங்கா என்னும் கணினி மென்பொருள் பூங்காவினை அமைத்தார்.
■அரசு ஊழியர்களைப் பழிவாங்குவதற்கே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த இரகசியக் குறிப்பேடு முறையை ஒழித்தார்.
■தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக மாநில திட்டக்குழுவை அமைத்தார்.
■எட்டாம் வகுப்பு வரைபடித்த ஏழை இளம் பெண்களுக்கு அரசின் சார்பில் ரூ.5,000/- (அதன்பின் ரூ.10,000/- திருமண நிதி உதவித் திட்டம் வகுத்தார்.)
■ஏழை எளியோருக்கான பன்முனை மருத்துவப் பரிசோதனைத் திட்டமான வருமுன் காப்போம் திட்டத்தை அறிவித்தார்.
■சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி அலுலவகம் கட்ட 5 லடசம் ஒதுக்கீடு செய்தார்.
■தமிழகத்தை இந்தியாவின் டெட்ராய்ட் ஆக மாற்றிய கார் உற்பத்தி தொழிற்கூடங்கள் தொடங்க அனுமதித்தார்.
■உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார்.
■தமிழ்விசைப் பலகையை தரப்படுத்துவதற்காக தமிழ் இணைய மாநாட்டை சிறப்பாக நடத்தினார்.
■சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கீடு செய்தார்.
■தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்தார்.
■தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையத்தை சென்னைக்கு கொண்டு வந்தார்.
■கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்கச் செய்தார்.
■பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் பதவியேற்ற தலைவர் கலைஞர் அவர்கள் அதே மேடையில் தமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்த 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் அறவே ரத்து, சத்துணவில் வாரம் இரு முறை முட்டகளை வழங்கல் போன்ற திட்டங்களை நிறைவேற்றுவதாக அறிவித்து, அதற்கான கோப்புகளில் மக்கள் முன்னிலையில் கையெழுத்திட்டார்.
■தந்தை பெரியார் நெஞ்சில் உள்ள முள்ளை அகற்றும் அரும்பணியாக தகுதியுள்ள அனைத்து சாதியினரும் திருக்கோயில்களில் அர்ச்சகராக உத்தரவு பிறப்பித்தார்.
■எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் கட்டயாப் பாடமாக்கப்பட்டது.
■கண்ணகி சிலை திறப்பு
■இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கல்.
■நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம்.
■பனைத் தொழிலாளர் நலனுக்குத் தனி வாரியம்.
தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம்.
■நுழைவுத் தேர்வு ரத்துக்கு நிபுணர் குழு அமைப்பு.
■மருத்துவம் பொறியியல் கல்விக் கட்டணம் குறைப்பு
■மதமாற்றத் தடைச் சட்டம் திரும்பப் பெறுதல்.
■பின்தங்கிய பகுதிகளில் தொழில் தொடங்க மானியம்.
■சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம்.
■அனைத்து நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டம்.
■சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
அரசு ஊழியர்களுக்கு எதிரான டெஸ்மா சட்டம் ரத்து.
■அரசுப் பணியில் சேர வயது வரம்பு நீட்டிப்பு.
■இளைஞர் சுய உதவி குழு அமைத்தல்.
■சட்டமன்ற மேலவை மீண்டும் கொண்டுவருதல்.
■கிராமங்களில் அமைதி ஏற்பட கோவில்களில் வழிபடும் இடங்களில் ஏற்றத் தாழ்வு அகன்றிட முக்கியப் பிரமுகர்களுக்கு, பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது.
#HBDKalaignar95

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக