திங்கள், 18 ஜூன், 2018

மாமன்னர் ஒண்டிவீரனார் வீரவணக்க நாள் எழுச்சி .. ஆர்.எஸ்.எஸ் சதிமுயற்சி .. ஆதி தமிழர் பேரவை வேண்டுகோள்

அருந்ததியர் சமூக அமைப்புகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் ஆதித்தமிழர்
பேரவை வேண்டுகோள்...
அன்பார்ந்த தோழர்களுக்கு ஆதித்தமிழர் பேரவையின் அன்பான வணக்கங்கள்,
ஆகத்து 20 - மாமன்னர் ஒண்டிவீரனார் வீரவணக்க நிகழ்வினால் ஒவ்வொரு ஆண்டும் அருந்ததியர் மக்களிடத்தில் உருவாகும் எழுச்சியும், அந்த எழுச்சியை அடையாளமாக வைத்து அரசியல் அதிகாரத்தை நோக்கி பயணிக்கும் முயற்சியையும் தடுக்கும் வகையில் பார்ப்பனிய பிஜேபியும் அதன் அடிமை அதிமுகவும் நுணுக்கமாக சில திட்டமிட்டு பணியை தொடங்கிவிட்டது.
அந்த ஆபரேசன் பெயர் சுவாமி ஒண்டிவீரன் மகாராஜ்
முழுமையாக தெரிந்துகொள்வோம்:
பட்டியல் சமூக மக்களிடையே ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத சிந்தனையை மிகவும் நுட்பமாக பரப்பி வருகிறது ஆர்.எஸ்.எஸ் சூழ்ச்சிக்கு பல பட்டியல் சமூக தலைவர்களும் மக்களும் இரையாகியுள்ளனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ் சூழ்ச்சிக்கு இரையாகாமல் பார்ப்பனிய எதிர்ப்பில், அம்பேத்கர் பெரியார் கருத்துகளை வலுவாக முன்னெடுத்துச் செல்லும் மக்களாக அருந்ததியர் மக்களும், அதன் தலைவர்களும் இருக்கிற காரணத்தினால் அந்த வலுவான கட்டமைப்பை உடைக்கும் பல திட்டத்தை பிஜேபியும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் தீட்டியுள்ளது..

அதில் முதன்மையானதும் மிக முக்கியமானதும் தான் *சுவாமி ஒண்டிவீரன் மகாராஜ்ஜி* என்ற திட்டம்..அதாவது போராளியாக நாம் நினைக்கும் மாமன்னர் ஒண்டிவீரனாரை கடவுளாக்கும் திட்டம். பெயருக்கு முன்பு *சுவாமி* என்று போடுவது முளைப்பாரி எடுப்பது மொட்டை போடுவது ஒண்டிவீரனுக்கு கோவில் கட்டுவது பின்பு பார்ப்பானை அழைத்து கும்பாபிசேகம் நடத்துவது இப்படி தொடர்ச்சியாக முன்னெடுக்கும் போது போராளி என்று சொல்வதை மக்கள் விட்டுவிட்டு ஒண்டி வீரனாரை சுவாமி என்றும் கடவுள் என்றும் சொல்ல வைப்பது அதன் மூலம் மக்களின் எழுச்சியை தடுப்பது, மேலும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று ஒண்டிவீரன் சுவாமிக்கு கோயில் கட்டபோகிறோம் அதற்கு ஆகும் செலவுகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று கூறி பெண்களை ஆர்.எஸ்.எஸ் வலைக்குள் இழுப்பது என பல திட்டங்களை பிஜேபி தீட்டியுள்ளது....
இந்த திட்டங்களை யாரை வைத்து செயல்படுத்த போகிறார்கள் என்பதை நாம் நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்டோர் தேசிய நல உரிமை ஆணையத்தின் துணை தலைவர் முருகன் என்பவரை வைத்துதான் இத்திட்டத்தை திட்டத்தை நிறைவேற்ற உள்ளனர். மத்திய இணை அமைச்சர் பதவிக்கு இணையான பதவியை அருந்ததியர் சமூகத்தை சார்ந்த முருகன் என்பவருக்கு கொடுக்க என்ன காரணம் என்றால் அவர் பிஜேபி கட்சியை சார்ந்தவர் என்பதைவிட மிக முக்கியமானது அவர் ஆர்.எஸ்.எஸ் மூலம் பயிற்சி கொடுத்து வளர்க்கப்பட்டவர் என்பது தான்.
அருந்ததியர் மக்களிடத்தில்
அம்பேத்கர் பெரியார் கருத்துகளும், கொள்கைகளும் ஆலமரமாய் வளர்ந்து நிற்பதை பார்த்து அதை வெட்ட வேண்டுமானால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்றவரால் மட்டுமே முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் அந்த எண்ணத்தில்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்ற அருந்ததியர் முருகனை தேர்வு செய்துள்ளார்கள். அகில இந்திய அளவில் துணைத்தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் முருகன் தமிழகத்தை கடந்து வேறு எந்த மாநிலத்திற்கும் செல்வது கிடையாது, அவருக்கு தமிழகத்தில் மட்டும்தான் பணி அதுவும் குறிப்பாக அருந்ததியர் மக்கள் மத்தியில் மட்டும்தான் கூடுதல்பணி என பிஜேபி முடிவு செய்து விட்டது. அதற்காக பல கோடி ரூபாய் பணத்தை செலவு செய்யவும் தயாராகிவிட்டது.
அரசு துறையில் மிக உயர்ந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அருந்ததியர் சமூகத்தை சார்ந்த நபர்களை அழைத்து கடந்த மாதம் சென்னையில் உள்ள, தனது வீட்டில் முருகன் அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார், அந்த கூட்டத்தில் பல விசயங்கள் பேசப்பட்டுள்ளது குறிப்பாக அருந்ததியர் மக்களை வசப்படுத்துவது அதற்கு ஒண்டிவீரனை பயன்படுத்துவது என முடிவெடுத்துள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ் சூழ்ச்சியை முறியடிக்கும் பொறுப்பு ஆதித்தமிழர்களாகிய நம் அனைவருக்கும் இருக்கிறது. பார்ப்பனிய சூழ்ச்சிக்கு நம் மக்கள் பழியாகிவிடாமல் தடுக்கும் பணியை ஒன்றினைந்து செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் கூடுதலாக நமக்கு உருவாகியுள்ளது. நம்மை அடிமைப்படுத்த எப்படிப்பட்ட சூழ்ச்சியோடு முருகன் வருகிறார் என்பதை முன் கூட்டியே நம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அதன் தொடக்கமாக எதிர்வரும் மாமன்னர் ஒண்டிவீரனார் நினைவுநாளில் அனைத்து அருந்ததியர் அமைப்புகளும் பார்ப்பனியத்தை வலுவாக எதிர்க்கும் தலைப்பில் பொதுக்கூட்டம் மாநாடுகளை நடத்தவும், பார்ப்பனிய எதிர்ப்பை நாம் ஒன்றாக எடுத்து செல்லும் போது அதை முறியடிக்க முடியும். எனவே மாமன்னர் ஒண்டிவீரனார் வீரவணக்க நாளில் பார்ப்பனிய எதிர்ப்பு மற்றும் காவி பயங்கரவாத எதிர்ப்பு என அமையும் வகையில் தலைப்புகளை தேர்வுசெய்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தால் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களின் சூழ்ச்சிக்கு எதிர்வினையாக அமையும் என்று நம்புகிறேன்.
ஒண்டிவீரனை கடவுளாக்கி ஓட்டு வங்கியை குறிவைக்கும் பாஜாக வின் ஊடுருவலை தடுப்போம்!
பார்ப்பனிய எதிர்ப்பில் இயல்பாக இருக்கும் அருந்ததியர் மக்களை கருத்தியலின் மூலம் இன்னும் வலுவாக்குவோம்!!
நன்றி.
இரா.அதியமான்
நிறுவனர் தலைவர்
ஆதித்தமிழர் பேரவை.
18.6.2018 - கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக