வெள்ளி, 29 ஜூன், 2018

தேர்தல் நிதி வசூலிப்பதற்காகவே பிளாஸ்டிக் தடை . பொதுமக்கள் அபராதம் செலுத்த கூடாது .

Kathiravan Mumbai : தேர்தல் நிதி வசூலிப்பதற்காகவே
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை .
பொதுமக்கள் அபராதம் செலுத்த கூடாது .
-மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சி தலைவர்
ராஜ் தாக்கரே பேச்சு ....

"மகாராஷ்டிரா அரசு தேர்தல் நிதி திரட்டுவவதற்காகவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டிய ராஜ் தாக்க்கரே,
மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதைப்போலவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு மகாராஷ்டிரா அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது ,தடையை அமல்படுத்துவதற்கு முன்பு பிளாஸ்டிக்கை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து கொடுத்திருக்கவேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியற்காக அபராதம் விதிக்கப்பட்டால் பொது மக்கள் அந்த அபராதத்தொகையை செலுத்தக்கூடாது .

இது போன்ற தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன அனால் நமது அரசாங்கம் என்ன செய்தது .பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்களிடம் இருந்து தேர்தல் நிதி வசூலிப்பதற்காகவே இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது .
தேவையான அளவு நிதி வசூலிக்கப்பட்டதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விலக்கிக் கொள்ளப்படும். நகரில் குடிசை பெருகிக் கொண்டே போகின்ற அதற்காக யாருக்கும் அபராதம் விதிக்கப்படுவதில்லை .சாலைகள் எல்லாம் குண்டு குழியுமாக காட்சியளிக்கின்றன அதற்காகவும் அபராதம் விதிக்கப்படுவதில்லை அனால் பிளாஸ்டிக் பை எடுத்து சென்றால் ரூபாய் 25.000 அபராதம் விதிக்கிறார்கள் .இந்த தடையை எப்படி மக்கள் மதிப்பார்கள். முதலில் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுங்கள் அதன்பிறகு தடை விதிப்பதை பற்றி பேசுங்கள் " என கட்டமாக பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக