ஞாயிறு, 3 ஜூன், 2018

கலைஞரை நோக்கி வீசும் கூழஙகற்கள்தான் பலருக்கு முகவரிகள்!


கலைஞர் அய்யா ..உங்களுக்கு அகவை  95 !
 இன்று உங்களால் பேசவும் முடியாது! 
ஞாபகசக்தி இருக்கிறதா என்பதே இன்னும் சரியாக தெரியாத ஒரு நிலை . இந்த நிலையில் இருந்து இனி மீண்டு வருவீர்களோ என்பதுவும் தெரியாது .
ஆனாலும் உங்களுக்குத்தான் எத்தனை பகைவர்கள் ?
திரும்பிய திக்கெல்லாம் நோகடிக்கும் கூர் அம்புகள் காத்திருக்கின்றனவே? 
மனித குல வரலாற்றில் சுயமாக சிந்தித்தோர்கள் எதிர்கொண்டவை   பெரும்பாலும் வசை சொற்கள்தானே? சுயநலமே உருவான  பொய்யர்களின் விஷம் தோய்ந்த அம்புகள் அவை.. 
வடவர்கள் ஒருபுறமும்  பார்ப்பனீயத்தை மூச்சு முட்ட குடித்துவிட்ட உள்ளூர் உன்மத்தர்கள் மறுபுறமும்.  
எதிரிகள் வீசும் எந்த கற்களுக்கும் பதில் கற்கள் வீசும் நிலையில் நீங்கள் இல்லை.
உங்கள் மீது வீசப்படும் கூழங்கற்கள் மட்டும்தானே பலரின் முகவரிகள்.
உங்களை நோக்கி வீசப்படும் சேறுதானே பலர் வீட்டின் அடுப்படியில் பொங்கும் சோறு.
அன்று  பள்ளிகூடத்தில் உனது  ஜாதிக்கு  மேலங்கி அணியும் உரிமை இல்லை என்று  உன் மேலங்கியை கழற்றியவர்கள் போல இன்று வரை உன்னை அவமானப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு  உனது வரலாற்று உனது வெளிச்சத்தில்  குளிர்காயும்  வீணர்கள்  உண்டு களித்து  இருக்கட்டும்!
ஜாதிக்கொரு நீதியும் வீதியும் சமைத்த நாட்டில் எல்லா ஜாதியையும் ஒன்றாக குடியிருத்தி நீ கட்டிய சமத்துவபுரங்கள் அவரகளின் ஜாதி திமிருக்கு நீ கட்டிய சமாதி .
பிச்சைக்கரகளே தெருவெங்கும் படுத்துறங்கிய நகரங்களில் முதலில் மறுவாழ்வு மையங்கள் அமைத்தது இந்தியவிலேயே உங்கள்  அரசுதானே?
மனிதனை மனிதன் இழுத்த கைரிக்க்ஷாவை இந்தியாவிலேயே முதலில் ஒழித்து கட்டியதும் உனது அரசல்லவா?
திடீர் திடீர் என்று பற்றி எரியும் குடிசைகளின் ஓலம் இனி கேட்க கூடாதென்று குடிசைவாசிகளை அடுக்கு மாடி குடியிருப்புக்களில் குடியமர்த்திய முதல் அரசும் உமதல்லவா?
சொத்துக்கும் பெண்களுக்கும் சம்பந்தம் இல்லாத தேசத்தில் பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் கொண்டுவந்தது உனது அரசல்லவா?
இன்னும் எத்தனை எத்தனை? எடுத்து கூற ஒரு  சிறு கட்டுரை  போதாதே?
 கருவறைக்குள் அனைத்து ஜாதியும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் இரண்டாயிரம் வருட அடிமை சங்கிலியை உடைத்த  அணுக்குண்டல்லவா?
எல்லாவறையும் விட 1975 இல் இந்திய அரசுக்கே பாடம் எடுத்த எமர்ஜென்சி எதிர்ப்பு இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு உலக அரசியல் அரங்கில் பேசப்பட போகிறதே? 
முழு இந்தியாவும் சப்தநாடியும் ஒடுங்கி போயிருந்த அந்த இருட்டு யுகத்தில்  தென்னகத்தில் இருந்து எழுந்த சூரியன் திமுக மட்டுமே? 
ஆட்சி போனால் போகட்டும் நாட்டை காப்போம் என்று முழங்கிய கோடை இடி முழக்கம் உங்கள்  குரல் அல்லவா? 
அன்று முழு இந்தியாவுக்கும் உலக ஜனநாயக சக்திகளுக்கும் இருந்த ஒரே கலங்கரை விளக்கம் திரு.மு,கருணாநிதி என்ற மனிதரும் திராவிட முன்னேற்ற கழகமும்தான் .
உங்களை நோக்கிதானே இந்திய ஜனநாயக  சக்திகள்  அணிவகுத்தன . அந்த போர் முரசு மெரீனா கடற்கரையில்தானே முதலில் ஒலித்தது.
நீங்கள் ஆட்சியை இழந்தீர்கள் ஆனால் இந்தியா தனது ஜனநாயக பாதைக்கு மீண்டது ! 
இன்னும் இன்னும் எத்தனை எத்தனை ? 
நீச பாசை என்று தூற்றியவர்களுக்கு   செம்மொழி என்று  செவிப்பறையில் ஓங்கி முழங்கியது சாதாரண புரட்சியா? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக