திங்கள், 11 ஜூன், 2018

பெ.மணியரசன் மீது தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி

mixim aநக்கீரன் -பகத்சிங் : - காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் மீது இன்று மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  சென்னை வருவதற்காக தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு இன்று இரவு சென்றபோது தஞ்சாவூரில் இரண்டு மர்ம நபர்கள்
மணியரசனை தாக்கியுள்ளனர்.  காயமடைந்த மணியரசன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்த்தேசிய பேரியக்க தலைவரும் காவிரி உரிமை மீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் காவிரி பிரச்சனை தொடங்கி மண்ணை மலடாக்கும் மரபணுமாற்ற விதைகள், காவிரி பகுதியை பாமவனமாக்கும் ஹைட்ரோ கார்ப்பன், மீத்தேன் திட்டம் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை உடனுக்குடன் கண்டித்து வந்தார்.
   இன்று கோவையில் புதியதலைமுறை தொலைக்காட்சி க்கு ஆதரவாகவும் பாஜக வுக்கு எதிராகவும் அறிக்கை கொடுத்தார். இந்த நிலையில் இரவு 9.35 மணிக்கு சென்னை செல்வதற்காக தனது வீட்டில் இருந்து தோழர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நீண்ட தூரத்திலிருந்து அவர்களை கண்காணித்து வந்த 2 மர்ம நபர்கள் காவேரி நகரில் இருட்டுப் பகுதியில் வரும் போது மணியரசன் கையில் வைத்திருந்த பையை இழுத்து அவரை கீழே தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர். இதில் மணியரசன் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனே வினோதகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.


தகவல் அறிந்து பலரும் பார்த்து நலம் விசாரிக்க செல்கின்றனர்.
   மணியரசன் தாக்கப்பட்டதை கண்டித்தும்  மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழின உணர்வாளர்கள் நாளை போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக